• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-19 14:48:56    
ஹெ செ இனம்

cri

ஹெ செ இனம், சீனாவின் மக்கள் தொகை குறைவான தேசிய இனங்களில் ஒன்றாகும். இவ்வினத்தவர்களின் எண்ணிக்கை, நாலாயிரம் மட்டுமே. "மலைப்பிரதேசத்தில் வாழ்பவர், அங்குள்ள வளத்தைச் சார்ந்து வாழ்வர். ஆற்று ஓரத்தில் வாழ்பவர், நீர் வளத்தைப் பயன்படுத்தி வாழ்வர்" என்று சீன பழமொழி ஒன்று கூறுகின்றது. ஒரு பிரதேசத்திலுள்ள மக்கள் வாழ வேண்டுமாயின், உள்ளூர் வளத்தை போதிய அளவில் பயன்படுத்தி உழைக்க வேண்டுமென, இது, பொருட்படுகின்றது. தலைமுறை தலைமுறையாக ஹெ செ இன மக்கள், வட கிழக்கு சீனாவின் ஹேலுங்கியாங், உசுரிசியாங் ஆகிய ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு நீர்வாழ் உயிரினங்கள் அதிகம். சுற்றுப்புறங்களிலும் உயரமான மலைகளும் அடர்த்தியான காடுகளும் உண்டு. மலைப்பிரதேசங்களில் மதிப்புள்ள தாவரங்கள் விளைகின்றன. எனவே, கோடைக்காலத்தில் அவர்கள் மீன்பிடிக்கின்றனர். குளிர்காலத்தில் வேட்டையாடுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக அங்கு மீன் வளம், நாளுக்குநாள் குறைந்து வருகின்றது. தவிரவும், காட்டு மிருகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசு கட்டளை பிறப்பித்துள்ளது. எனவே, ஹெ செ இனத்தின் பாரம்பரிய உற்பத்தி, வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய மாற்றம், மீன்பிடிப்பிலும் வேட்டையாடுவதிலும் முக்கியமாக ஈடுபடும் இவ்வினத்தவர்களுக்கு பொருந்தியதா? ஹெ செ இனம் குழுமிவாழும் இடமான ஹேலுங்கியாங் மாநிலத்தின் தொங் சியாங் நகரம், இனி, ஒரு சிறிய மீன்பிடிப்பு கிராமம் இல்லை. பன்நோக்கமுடைய ஒரு சிறிய நகராக அது காட்சி அளிக்கிறது.

நகரப்பிரதேசத்தில் சாலைகள் சீராகவும் அகலமாகவும் இருக்கின்றன. சாலைகளின் ஓரத்தில் அமைந்துள்ள கட்டிடங்கள், ஹெ செ இனத்தவரின் புதிய வசிப்படங்களாகும். புறநகரில் பசுமையான விளை நிலங்கள், பெரும்பாலான ஹெ செ இன மக்களின் புதிய வேலை தளமாகும். இன்று, அவர்கள் மீனவர்கள் அல்ல. பயிரிடுவது என்பது, அவர்களின் புதிய தொழிலாகும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இனங்களின் விரைவான வளர்ச்சிக்கு உதவிடும் கொள்கையைச் சீன அரசு அறிமுகப்படுத்தியது. ஹெ செ இன மீனவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு, இடம் ஏற்பட்டதால், ஹெ செ இன மக்கள், முன்னாள் உற்பத்தி மற்றும் வாழ்க்கை முறையைச் சீர்படுத்துவதற்கு உதவியான சலுகை நடவடிக்கைகளை உள்ளூர் அரசு வகுத்திருக்கின்றது. ஹேலுங்கியாங் மாநிலத்தின் தொங் சியாங் நகர ஹெ செ இன அதிகாரி, யூ லீ ஜுன் எடுத்துக்கூறியதாவது

பயிரிட விரும்பும் விவசாயிகளின் குடும்பங்கள் அனைத்தும், கிராம நிர்வாக பகுதியுடன் உடன்படிக்கை செய்து வரையறுக்கப்பட்ட இடத்தில் பயிரிடலாம். நில வளம் குறைவாக இருப்பதால், ஹெ செ இனத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். உற்பத்திக்கான வசதிகள், நிதி, விதை, ரசாயன உரம், விவசாய இயந்திரம் என்றெல்லாம் அரசு வழங்கும். தொழில் நுட்ப சேவையும் அரசின் ஆதரவில் அடங்கும் என்றார்.

1  2