
ஹெ செ இன மக்கள், இதற்கு முன்பு பயிரிட வில்லை. எனவே துவக்கத்தில் முன்னாள் உற்பத்தி மற்றும் வாழ்க்கை முறையைக் கைவிட வேண்டும் என்பதற்காக, அனைவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. உள்ளூர் அரசு, அனைவரின் கவலையை அறிந்து கொண்டு, மீனவர்களாக இருந்த அனைவருக்கும் பயிரிடுதல் பற்றிய பயிற்சி வகுப்புகளை நடத்தியது. இதில் நிலம் பயிரிடப்படும் முறை, அனுவவம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
ஹெ செ இனத்தவரான பு தியே ஜுன் முதன்முதலில் பயிரிடத்துவங்கினார். 1995ம் ஆண்டு மதுல், 9 ஹெ செ இன மீனவர் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கி, மீன்பிடிப்பைக் கைவிவிட்டு, பாழடைந்த தீவுக்குச் சென்று தரிசு நில்ததைப் பண்படுத்த துவங்கினர்கள். அந்த ஆண்டிலேயே 100க்கும் அதிகமான ஹேக்டர் நிலம் விளைநிலமாக மாற்றப்பட்டது. காட்டு களை அடர்ந்து வளர்ந்திருந்த தீவில் தற்போது, பச்சை பச்சேலேன்ற பயிர்கள் வளர்ந்துள்ளன. பயிரிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம், மீன்பிடித்து பெறும் வருமானத்தை விட அதிகம். வாழ்க்கைக்காகக் கவலைப்பட்டிருந்த மீனவர்களின் முகத்தில் மலர்ச்சி காணப்படுகின்றது.

அவரது வெற்றி இதர ஹெ செ இன மக்களுக்கு நம்பிக்கை யூட்டியது. அவர்கள் மீன்பிடிப்பை விட்டு பயிரிடத்துவங்கினர். குறுகிய இரண்டு ஆண்டுகளுக்குள்ளே தொங் சியாங் நகரில், ஹெ செ இன மக்கள் பண்படுத்திய விளைநிலப்பரப்பு சுமார் இருபதாயிரம் கேக்டர் ஆகும். நிலத்தில் அயராது உழைத்து வரும் மேலதிகமான ஹெ செ இனத்தவர்கள், வளமடைந்து மகிழ்கின்றனர்.
இருப்பினும், தொங் சியாங் நகரில், தமது முன்னோடிகளின் பாரம்பரிய தொழிலைக் கைவிட விரும்பாமல், மீன்பிடித்தொழிலை மீன் வளர்ப்புத் தொழிலாக்கும் பலர் இருக்கின்றனர். அரசின் உதவியுடன், உள்ளூரின் வளமான நீர் வளத்தைப் பயன்படுத்தி, மீன் வளர்ப்பு பண்ணைகளை நடத்தியுள்ளனர். சிலர், மீன்வளர்ப்பை தொழில் முறைப் படி செய்கின்றனர். அவர்கள் வளமடைந்து வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் பொறுப்பாளர் யூ யு சாங் அறிமுகப்படுத்தியதாவது:
லீ சியுன் என்பவர், பத்து ஹேக்டர் பரப்பளவுடைய மீன்வளர்ப்பு குளங்களுக்கு ஒப்பந்த முறையில் பொறுப்பேற்றுள்ளார். சிறந்த பயன் கிடைத்தது. ஆண்டுக்கு முப்பதாயிரம் யுவான் வருமானம் என்றார்.
குறைவான மக்கள் தொகையுடைய ஹெ செ இனத்தின் வளர்ச்சி, சீனாவின் பல்வேறு நிலை அரசுகளின் உதவி ஆதரவு பெற்றிருக்கின்றது. ஹெலூங்சியாங் மாநிலத்து தேசிய இன விவகாரக் கமிட்டியின் துணை தலைவர் லீ சுன் பாவ் அம்மையார், இது பற்றி பேசுகையில், கிழக்கு சீனாவில் விரைவாக வளர்ச்சிடைந்துள்ள சில நகரங்கள், இந்த சிறிய தேசிய இனங்களின் வளர்ச்சியை விரைவாக்குவதற்கு எவ்வாறு உதவிடுவது என்பதை, உள்ளூர் அரசுகளின் ஒரு பணியாக கொள்கின்றன. திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயார் என்றார். 1 2
|