• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-22 10:21:45    
Jiang Xi மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி

cri

சீனாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள Jiang Xi மாநிலத்தில், வேளாண்துறை வளர்ச்சியடைந்துள்ளது. சீனாவில் தானியம் விளையும் 13 முக்கிய பிரதேசங்களில் இதுவும் ஒன்றாகும். கிழக்கு மற்றும் தென் சீனாவில் உள்ள வளர்ச்சியடைந்த மாநிலங்களை ஒட்டி இது அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, Jiang Xi மாநிலம் புவியியல், மூலவளம் உழைப்பாற்றல் ஆகிய மேம்பாடுகளைப் பயன்படுத்தி, பொருளாதார கட்டமைப்பைப் படிப்படியாகச் சரிப்படுத்தி, அதிக அன்னிய முதலீட்டை கொண்டு வந்துள்ளது. இம்மாநிலம், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் மிகுந்த கவனம் செலுத்தி, பொருளாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் ஒருங்கிணைந்து வளர்த்துள்ளது.

பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சி மன்டலம் மற்றும் புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தின் கட்டுமானத்தை வலுப்படுத்தி, முழு மாநிலத்தின் பொருளாதாரத்தில் தொழிற்துறை மற்றும் சேவைத் துறையின் விகிதத்தை படிப்படியாக அதிகரிப்பது என்பது, பொருளாதார கட்டமைப்பு சரிப்படுத்தலில் Jiang Xi மாநிலம் மேற்கொண்டுள்ள முக்கிய சாதனைகளில் ஒன்றாகும்.

Nan Chang புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலம், Jiang Xi மாநிலத்தில் ஒரு அரசு நிலை வளர்ச்சி மண்டலமாகும். Nan Chang, இம்மாநிலத்தின் தலைநகர். 32 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய வளர்ச்சி மண்டலத்தில் நவீன தொழிற்சாலைகள் நிறைந்து காணப்படுகின்றன. சாலைகள் அகலமாக உள்ளன. வரி, நிதி உள்ளிட்ட சேவை நிறுவனங்கள் முழுமையாக உள்ளன. Nan Chang வளர்ச்சி மண்டல நிர்வாகக் கமிட்டியின் துணை தலைவர் Zhang Xiao Gang செய்தியாளரிடம் பேட்டி அளிக்கையில், தற்போது, இவ்வளர்ச்சி மண்டலத்தில் சுமார் 800 உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன என்றார். மின்னணு தகவல், பயனீட்டு மென் பொருள், உயிரி மருந்து தயாரிப்பு ஆகியவற்றை மையமாக கொண்ட தொழில் அமைப்பு உருவாயிற்று. கடந்த ஆண்டு, இம்மாண்டலத்தின் மொத்த தொழிற்துறை உற்பத்தி மதிப்பு, 1300 கோடி யுவானை எட்டியது. சிறந்த இயந்திர வசதிகளோடு, தரமிக்க சேவையையும் இங்கு முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு வளர்ச்சி மண்டலம் வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது:

"முதலீட்டுத் திட்டப்பணி கிடைத்ததும், சிறப்பு தலைவர்கள் இதை தொடர் சேவைகளை வழங்குகின்றனர். இந்த அடிப்படையில், ஒவ்வொரு மாதத்திலும் முக்கிய திட்டப்பணிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நாங்கள் நடத்துகின்றோம்." என்றார் அவர்.

1  2