• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Apr 10th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-22 10:21:45    
Jiang Xi மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி

cri

1991ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Nan Chang வளர்ச்சி மண்டலம், இம்மாநிலத்தில் உள்ள 100க்கு அதிகமான வளர்ச்சி மண்டலங்களில் ஒன்றாகும். வளர்ச்சி மண்டலங்களின் சிறந்த இயந்திர வசதிகளையும், தரமிக்க சேவையையும் கொண்டு, இம்மாநிலத்தின் நகர சுற்றுச்சூழலின் மேம்பாட்டுடன், கடந்த ஆண்டு, இம்மாநிலம் கொண்டு வந்த அன்னிய முதலீட்டுத் திட்டப்பணிகளின் எண்ணிக்கை, உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட அன்னிய முதலீடு, உண்மையில் பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீடு ஆகிய 3 இலக்குகளில், சீன நடுப்பகுதியில் உள்ள 6 மாநிலங்களில் முதல் இடத்தை Jiang Xi மாநிலம் வகிக்கின்றது.

வெளிநாடுகளிலிருந்தும், உள் நாட்டின் வளர்ச்சியடைந்த பிரதேசங்களிலிருந்தும் முன்னேறிய தொழில் நுட்பம் மற்றும் நிர்வாக அனுபவத்தை கொண்டு வருவதன் மூலம், இம்மாநிலத்தின் தொழில் கட்டமைப்பை மேம்படுத்தி, பொருளாதார தரத்தையும் பயனையும் உயர்த்துவது, பொருளாதார கட்டமைப்பு சரிப்படுத்தலில் Jiang Xi மாநிலம் மேற்கொண்டுள்ள மற்றொரு முக்கிய நடவடிக்கையாகும். அண்மையில், வணிகர்களின் முதலீட்டை ஈர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரம் செய்வதற்காக, ஹாங்காங்கிற்கு பிரதிநிதிக் குழு ஒன்றை Jiang Xi மாநிலம் அனுப்பியது. இம்மாநிலத்தின் அடிப்படை வசதிக் கட்டுமானம், அறிவியல் தொழில் நுட்பம், கல்வி, பண்பாடு, நலவாழ்வு உள்ளிட்ட திட்டப்பணிகள் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது. Jiang Xi மாநிலத்தின் நிரந்தரத் துணை தலைவர் Wu Xin Xiong செய்தியாளரிடம் பேட்டி அளிக்கையில், இந்நடவடிக்கை பெரும் சாதனை பெற்றுள்ளது. 67 உடன்படிக்கைகளும், அனுமதிப் பத்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்த முதலீட்டுத் தொகை 110 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது என்று கூறினார். இம்மாநிலம், வெளிநாட்டு திறப்பு பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில், கண்காணிப்பு முறையை உருவாக்கியுள்ளது.


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040