• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-24 08:21:47    
 கீழை பண்பாடு மீது ஆர்வம் கொண்ட இத்தாலியர் ஆன்டரியே கவாடுட்டி

cri
இத்தாலி நாட்டவர் ஆன்டிரியே பெய்ஜிங்கில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றார். அவர் ஒரு சுயேச்சை படப்பிடிப்பாளர். Camera, DV ஆகியவற்றின் மூலம் அவர் தனது பார்வையில் பட்ட சீனாவை மேலை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றார்.

இத்தாலியின் மிலன் நகரில் பிறந்த ஆன்ட்ரியே, கீழை பண்பாடு மீது ஆர்வம் மிக்கவர். இடைநிலை பள்ளிக்குப் பின், அவர் இத்தாலியின் ஒரு பல்கலைக்கழகத்தில் சீன மொழி பிரிவில் சேர்ந்து படித்தார். 1981ஆம் ஆண்டு, பல்கலைக்கழக மாணவராக அவர் கிழக்கு சீனாவின் நாஞ்சின் நகருக்கு வருகை தந்தார். சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு கொள்கை குறுகிய காலத்துக்கு முன் நடைமுறைக்க வந்த வளரும் நாடான சீனாவை இத்தாலியுடன் ஒப்பிடும் போது, ஈர்ப்பு ஆற்றல் மிகுந்தது. 1982ஆம் ஆண்டு, மேற்படிப்புக்காக அவர் ஷாங்காயிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயின்றார். 2 ஆண்டுகளுக்குப் பின், அவர் ஹாங்காங்கிலுள்ள ஒரு இத்தாலி கம்பனியில் பணி புரியத் துவங்கினார். 1990ஆம் ஆண்டு, அந்த கம்பனி, பெய்ஜிங்கில் கிளையை அமைத்தது. இக்கிளையின் முதன்மை பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆன்ட்ரியே தமது பெய்ஜிங் வாழ்க்கையைத் துவக்கினார்.

1999ஆம் ஆண்டு, ஆன்ட்ரியே இப்பணியிலிருந்து விலகி, சுயேச்சை படப்பிடிப்பாளராக மாறினார். இது பற்றி, சரளமாக சீன மொழியில்அவர் கூறியதாவது,

சிறு வயதிலேயே எனக்குப் படம்பிடிப்பதில் ஆர்வம் உண்டு. 90வது ஆண்டு முதல், வீடியோ படம் பிடிக்கத் துவங்கினேன். அதேவேளையில், குறிப்பிட்ட தொகை சேமித்தேன். நிலைமை பக்குவமானதும், இப்பணியில் முழு மூச்சுடன் ஈடுபடத் துவங்கலாம் என்று கருதினேன் என்றார் அவர்.

பழம்பெரும் நகரான பெய்ஜிங்கில், அதிகமான காட்சிகள் இருக்கின்றன. தொன்மையான கோயில்கள், அருங்காட்சியகங்கள், நகரவாசிகளின் பழைய ஒடுக்கமான தெரு வாழ்க்கை, அலுவலக பணியாளர்களின் நவீன வாழ்க்கை வடிவம் முதலியவை ஆன்ட்ரியேயை ஈர்க்கின்றன. அவர் பெய்ஜிங்கில் சிறப்பு படக் காட்சி நடத்தியிருக்கின்றார்.

பெய்ஜிங் மாநகர் தவிர, ஆன்ட்ரியே வேறு பல இடங்களுக்கும் சென்றார். சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருட்களை சேகரித்து, உரிய இசையை இணைத்து, விளக்கத் திரைப்படத்தைத் தயாரித்து, ஆன்ட்ரியே தனது பார்வையில் சீனாவை மக்களுக்குக் காண்பிக்கின்றார்.

அவருடைய திரைப்படங்கள் பல தடவையாக பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. வேறு சில சீனாவின் தொலைக்காட்சி நிலையங்களால் பயன்படுத்தப்பட்டன. அவருடைய திரைப்படத்தில், பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைத்து, மேலை மற்றும் கீழை சிந்தனையை ஒப்புநோக்கி சீன சமூகத்தை அறிந்து கொள்ளலாம்.

திரை மூலம் தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவதோடு, மேலும் அதிகமான மக்களுக்கு ஒரு உண்மையான சீனாவை அறிமுகப்படுத்த விரும்புவதாக ஆன்ட்ரியே கூறினார்.

எனது உணர்வையும் நான் புரிந்து கொள்வதையும் பிறரிடம் வெளிப்படுத்த விரும்புகின்றேன். சீனா பற்றி பல மேலை நாட்டு மக்கள் பழைய கருத்துக்களை கொண்டுள்ளனர். இவை சரியில்லை. இத்தகைய கூற்று சீனாவுக்கு தீங்கு விளைவிக்கும். எனது படிப்பு மூலம் சீனா பற்றிய மேலை நாட்டவர்களின் அறிவை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். அறிந்து கொண்டால், விரைவில் இந்நாட்டின் மீது அன்பு வளரும் என்றார் அவர்.

1  2