• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-24 08:21:47    
 கீழை பண்பாடு மீது ஆர்வம் கொண்ட இத்தாலியர் ஆன்டரியே கவாடுட்டி

cri

ஆன்ட்ரியேயின் தனிச்சிறப்புடைய கருத்து பல சீன மேடை நாடக இயக்குநர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவின் மிகவும் புகழ்பெற்ற நாடகக்குழுவான பெய்ஜிங் மக்கள் கலை நாடக குழுவுக்கு, அவர் பல multimedia திரைப்படங்களை பிடித்தார். இக்குழுவின் இயக்குநர் லீ லியு யி ஆன்ட்ரியே மிகவும் விரும்புகின்றார்.

நாங்கள் மகிழ்ச்சியாக பணி புரிகின்றோம். ஆன்ட்ரியே வெளிநாட்டவராக உணரவில்லை. நன்றாக ஒத்துழைத்துள்ளோம். சில சமயங்களில் அவர் சில சீன பணியாளர்களை விட மேலும் கவனமாக பணி புரிகின்றார் என்றார் அவர்.

ஆன்ட்ரியேயின் மனைவி பெய்ஜிங்கிலுள்ள ஒரு வெளிநாட்டு கம்பனியில் பணி புரிகின்றார். அவருடைய பெயர் ஜிங் சியௌ பெய். படம்பிடிப்பது கணவனுடைய வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறிவிட்டது என்று அவர் கூறினார்.

வெளியே போகும் போதெல்லாம், அவர் திஜ்டோல் விடியோ கேமிராவைக் கொண்டு செல்கின்றார். நகைசுவையாக உணர்ந்தால், அவர் படம் பிரிக்கின்றார். சீனாவின் பல்வேறு இடங்களுக்கு ஏன் பல ஒதுக்குப் பிரதேசங்களுக்குக் கூட அவர் சென்று வந்துள்ளார் என்றார் அவர்.

ஆன்ட்ரியேயின் திரைப்படம் அடிக்கடி ஜிங் சியௌ பெய்க்கு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. கணவனின் இலட்சியத்தை அவர் மிகவும் ஆதரிக்கின்றார். அவர்களுடைய வீட்டில், பெரிய திரை வசதி, கணிணி, படம் பதிபாசிரி வசதி உள்ளது. பட சுருள்கள் ஒரு மீட்டர் உயரமான அலமாரியில்இல் நிறைந்துள்ளன.

ஆண்டுதோறும் ஆன்ட்ரியே இத்தாலிக்குச் சென்று, தாயைப் பார்க்கின்றார். நீண்டகாலமாக சீனாவில் பணி புரிந்து வாழ்வது, தாயின் புரிந்துணர்வு, ஆதரவு ஆகியவற்றிலிருந்து பிரிக்கப்பட முடியாது என்று அவர் கருதுகின்றார்.

நான் செய்வது எல்லாவற்றுக்கும் தாயின் ஆதரவு உள்ளது. வெற்றி பெற்றால், அவர் மிகவும் மகிழ்கின்றார். எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும், கோட்பாட்டின் படி கவனமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் செய்தால் சரி. தற்போது நான் பெற்ற வெற்றி அவருக்கு மகிழ்ச்சி தருகின்றது, இது அவருக்கு பக்கத்தில் நான் தங்கியிருப்பதை விட அதிகம் என்று கருதுகின்றேன் என்றார் அவர்.

எதிர்காலத்தின் திட்டம் பற்றி குறிப்பிடும் போது, சீனாவை பற்றிய ஒரு கதை படத்தை எடுக்க வேண்டும் என்று ஆன்ட்ரியே கூறினார்.


1  2