• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-29 18:24:32    
விட்டாரய்யா! பட்டம் விட்டாரய்யா!

cri

பறவை பறந்தாலும், விமானம் பறந்தாலும், பட்டம் பறந்தாலும், ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்படுவது மனித இயல்பு. இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் சுதந்திரத் திருநாளான ஆகஸ்ட் 15 அன்று மக்கள் கூட்டம் கூட்டமாக பட்டங்களைப் பறக்க விடுவது வழக்கம். சீனாவில் வசந்தகாலத்தின் போது சின்னதும் பெரியதுமாய் பற்பல வடிவங்களில் வானை நிறைக்கும் பட்டங்கள் வண்ணக் கோலங்களை வாரி இறைக்கின்றன.

சீனாவில் பட்டம் தயாரிப்பது ஒரு தொழிலாக மட்டுமல்ல, ஒரு கலையாகவும் பின்பற்றப்படுகிறது. இந்தப் பட்டத் தயாரிப்பிலும் ஒரு புதுமை செய்கிறார் 55 வயதான லெங் ஷிச்சியாங். அண்மையில் இவரை "சாதனை படைத்த நாட்டுப்புறக் கலைஞர்" என்று சீனக் கலைக் கழகம் தேர்ந்தெடுத்தது.

இவர் 1980ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இருந்தே கிட்டத்தட்ட 100 குட்டிப் பட்டங்களைத் தயாரித்திருப்பதே பெருமைக்கும் புகழுக்கும் காரணம். பட்டம் தயாரிப்பதே சிக்கலான வேலை. அதிலும் இத்தினியூண்டு குட்டிப் பட்டங்களைத் தயாரிப்பது என்றால் சும்மாவா?

"பெரிய பட்டங்களையும் நடுத்தர பட்டங்களையும் எல்லோரும் சர்வ சாதாரணமாகத் தயாரிக்கின்றனர். இதில் வியப்பு இல்லை. எனவே அவர்களை பெயரும் புகழும் தேடிப் போவதில்லை. ஆனால் லெங் பூதக் கண்ணாடியின் உதவி இல்லாமலேயே குட்டிப் பட்டங்களைச் செய்வதால் இவருடைய பெயரும் புகழும் பூதாகரமாக வளர்ந்து விட்டது என்று கூறுகிறார், சீனாவின் பிரபல பட்ட ஆய்வாளர் ஜின் ச்செங் இப்படிப் புகழ்பெறுவதற்காக லெங் தயாரித்த குட்டிப் பட்டத்தின் அளவு என்ன தெரியுமா? 7மில்லி மீட்டர் நீளமும், 7 மில்லி மீட்டர் அகலமும் உடைய இந்த குட்டிப் பட்டம் ஒரு சென்ட் நாணயத்தை விட அளவில் சிறியது. ஆனால் அந்த சின்னப் பட்டத்திலே சிக்கலான வடிவங்கள் பல்வேறு வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளன.

முதலில் இவர் வழக்கம் போல மூதாதையரின் வழியைப் பின்பற்றி இயந்திர கதியில் பெரிய பட்டங்களைத் தான் தயாரித்தார். ஒரு நாள் திடீரென்று ஏன் சின்னப் பட்டங்களைச் செய்யக் கூடாது என்ற ஒரு கேள்வி இவரது உள்ளத்தில் எழுந்தது. பண்டைக் காலத்தில் சில நாட்டுப்புறக் கலைஞர்கள் சின்னப் பட்டங்களைச் செய்துள்ளனர். ஆனால் அதற்கு வேண்டிய பொருட்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, சின்னஞ்சிறு பரப்புக்குள்ளே எவ்வாறு நேர்த்தியான படங்களை வரைவது, இவ்வளவு கஷ்டப்பட்டு செய்த குட்டிப் பட்டங்களை எவ்வாறு பறக்க விடுவது என்ற நுட்பங்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்த போர்களினாலும், சமூகக் குழப்பங்களாலும் மறைந்து விட்டன. ஆகவே புதுப்பாதை போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்த லெங், தனது அசலான திறமைகளைப் பயன்படுத்தி குட்டிப் பட்டங்களைச் செய்யத் தொடங்கினார் இது சவால் மிகுந்த வேலைதான். ஆனாலும் லெங் இதை மிகவும் விரும்புகிறார். இவர் தயாரித்த குட்டிப் பட்டங்களின் அளவு 20 சதுர சென்டிமீட்டர் பரப்பில் இருந்து 49 சதுர மில்லிமீட்டர் பரப்பு வரை வேறுபட்டவை.

1  2