• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-29 18:24:32    
விட்டாரய்யா! பட்டம் விட்டாரய்யா!

cri

7 மி. மீ X 7 மி. மீ அளவுக்கு இவர் செய்த பட்டம்தான் உலகிலேயே மிகச் சின்னதா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும் தனக்குத் தெரிந்தவரை யாரும் இவ்வளவு சின்னதாகப் பட்டம் செய்தது இல்லை என்கிறார். பட்டம் செய்தால் மட்டும் பேதுமா? பறக்க வேண்டாமா? லெங் செய்த மிகவும் சிறிய குட்டிப் பட்டம் கூட வானில் பறக்க விடப்பட்டுள்ளது. பறக்காத பட்டம் செய்து தேர்ந்த கைவினைக் கலைஞன் என்று பெயரெடுப்பதால் என்ன பயன் என்று வினவுகிறார் லெங்.

தரமான பட்டம் தயாரிப்பதற்கு பட்டம் செய்யும் போது மனநிம்மதி மிகவும் முக்கியமாகத் தேவை என்கிறார். மனநிலை சரியாக இல்லாவிட்டால் பட்டம் செய்ய மாட்டாராம். குட்டிப் பட்டம் செய்வதற்கு ஒரு நாள் குறித்த பிறகு, அந்த நாளில் தொலைபேசியைத் தொடக் கூட மாட்டார். நல்ல செய்தியோ, கெட்ட செய்தியோ தொலைபேசியில் எது வந்தாலும் அது உள்மனதை மிகவும் பாதித்து விடுகிறது. உணர்வு மாற்றம் இந்த நுட்பமான வேலைக்கு எதிரி என்கிறார் லெங்.

பட்டம் செய்வதற்காக, மூங்கில் குச்சிகளைச் சீவும்போதும் குட்டிப் பட்டங்களின் மீது படங்களை வரையும் போதும் லெங் வேகமாக மூச்சு விடுவதில்லை. மிகவும் கஷ்டப்பட்டு மூச்சை அடக்கி ஒரே சீராகவும், ஒழுங்காகவும் சுவாசிக்கிறார். மூச்சை இழுத்து வெளியே விடும் போது, சில சமயங்களில் கைவிரல்கள் லேசாக நடுங்குமாம். அப்போது குட்டிப் பட்டம் சேதமாகிவிடக் கூடும் என்கிறார்.

குட்டிப் பட்டத்தைப் பறக்க விடுவதற்கு விசேஷமான ஒரு நூல் தேவை. ஆகவே மயிரிழையை விட மெல்லிதான ஒரு நூலை தயாரித்திருக்கிறார். அந்த நூலை பட்டத்தில் கட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மூச்சை அடக்கிக் கொண்டுதான் நூலைக் கட்டுகிறார். ஏனென்றால், கொஞ்சம் வேகமாக மூச்சுக் காற்று வந்தால் கூட, மெல்லிய நூல் அதில் பறந்து போய்விடும் என்று லெங் கூறுகிறார்.

இவ்வளவு அரும்பாடுபட்டு நுட்பமாக, குட்டிப் பட்டங்களைத் தயாரிக்கும் லெங், தம்மிடம் இந்தக் கலையைக் கற்க பயிற்சியாளர்கள் வருவதில்லையே என்று கவலைப்படுகிறார். பணம் சம்பாதிக்க முடியாத, இவ்வளவு கடினமான வேலையில் ஈடுபட இளைஞர்கள் யாருமே முன்வருவது இல்லையாம்.

அற்புதமான இந்த நாட்டுப்புறக் கலையை அழியாமல் அரசுதான் காக்க வேண்டும் என்று கூறும் லெங் ஷிச்சியாங், இந்த நுட்பத்தை இளைய தலைமுறையின் தோளில் சுமத்திவிடலாம் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்.


1  2