• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-30 15:47:34    
கணிணி பன்முக பாதிப்பு தடுப்பது

cri

ராஜாராம்........கணிணி என்றால் நடப்பு நூற்றாண்டில் கண்டுபிடிப்பு சாதனைகளில் தலைசிறந்த கனியாக அழைக்கப்படலாம். இதன் மூலம் மனிதர் பணி, வாழ்க்கை, கல்வி ஆகிய துறைகளில் முன்கண்டிராத மாற்றம் ஏற்பட்டுள்ளது. இணைய தொரமைப்பு பரவியதுடன் கணிணியில் மனிதர் சார்ந்திருக்கும் அளவு மென்மேலும் அதிகமாகும். சிலர் நாள் முழுவதிலும் கணிணி முன்னால் உட்கார்ந்து பணிபுரிகின்றனர். சிலர் கட்டற்ற இணைய உலகில் மூழ்கி வருகின்றனர். கணிணி மனிதருக்கு பற்வகை வசதி ஏற்படுத்தும் அதேவேளையில் உடல் ஆரோக்கியத்துக்கு கெட்ட பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. கலையரசி இது பற்றி உங்கள் கருத்து என்ன?

கலை........ராஜாராம் நீங்கள் சொன்னது சரியானது. இப்போது "கணிணி பன்முக பாதிப்பு" கண்கள் களைப்பு, கசப்பு, கண்பார்வை குறைவு ஆகிய பிரச்சினைகளில் காணப்படுகின்றது. பெய்சிங் நகரில் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பில் பயில்கின்ற மாணவர் சோ ச்சொ பற்றி உதாரனமாக கூறலாம். கணிணி பயில்வதில் அவருடைய சிறந்த உதவியாக இருக்கின்றது. ஆனால் நீண்டநேரமாக சரியற்ற முறையில் இதை பயன்படுத்தியதால் அவருடைய கண்பார்வை பெரிதும் பாதிக்கப்படடது. இப்போது அவருடைய கருத்தை கேளுங்கள்"என் கண்பார்வை கணிணியால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகத்தில் நுழைந்த போது என் கண்பார்வை பரவாயில்லை. பயிலும் போது கணிணி நீண்டநேரமாக பயன்படுத்தியதால் இப்போது கண்பார்வை குறைந்துள்ளது"என்றார் அவர்.

ராஜாராம்......கலையரசி நீங்கள் எடுத்துகாட்டிய உதாரனம் எங்கள் வாழ்க்கையில் அச்சுறுத்தலாக பயன்படுத்தலாம். கணிணியை பயன்படுத்தும் போது கண்பார்வை ஒடுக்கமான திரையை நோக்கி சேர்க்க வேண்டும். கண்களுக்கும் திரைக்குமிடையில் இடைவெளி மிக குறுகியது. ஆகவே நீண்ட நேரம் கணிணி பயன்படுத்தினால் கண்கள் தெரியாமல் அளவுக்கு மீறிய அழுத்தத்துடன் வேலை செய்கின்றன. விளைவாக கண்கள் களைப்பு உணர்ச்சி உணர்ந்தது. தவிர கணிணி பயன்படுத்தும் போது திரையில் விறுவிறுபாக ஆடும் சொற்கள், குறிப்பு, படம் ஆகியவற்றை படிக்கும் போது கண்கள் மின்னும் முறை குறையும் இது கண்களில் வறட்சியுணர்வு ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகும். இத்தகைய நிலைமை ஏற்படாமல் தவிர்க்க எப்படி கையாள முடியும். எப்படி தடுக்க வேண்டும். இது பற்றி நீங்கள் நமது நேயர்களுக்கு சொல்லலாமா?

கலை................முகிழ்ச்சி. கணிகணி கண்களுக்கு பல பாதிப்பு ஏற்படுத்திய போதிலும் இந்த பாதிப்பை அறிவியல் முறையில் தடுக்கலாம். இது பற்றி நிபுணர் சன் ஹோ சின்னுடைய கருத்தை கேளுங்கள்.

ராஜாராம்......."பொதுவாக கூறினால், தடுப்பு எளிதானது. நீண்ட நேரம் கணிணி முன்னால் உட்கார்ந்து வேலை செய்தால் கண்கள் சரியான நேரத்தில் மூடி ஒய்வு எடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக 1 அல்லது 2 மணி நேரம் வேலை செய்த பின் 10 முதல் 15 நிமிடம் வரை ஓய்வு எடுக்க வேண்டும். கண்மூடுவது, தொரைவில் உள்ள மரங்கள் அல்லது பச்சை புல் தரையை பார்ப்பது ஆகியவற்றின் மூலம் கண்களுக்கு ஏற்பட்ட களைப்பு நீக்கப்படலாம்"என்று நிபுணர் சன் ஹோ சின் கூறுகின்றார். அவருடைய கருத்து சரியானது. இங்கே மக்களுக்கு மேலும் சில கவனத்தை நினைவு கூறலாம்.

 

கலை.......இது பற்றி நீங்கள் விபரமாக எடுத்து கூறுங்கள்.

ராஜாராம்......கண்டிப்பாக. கணிணியின் திரையொளி அதை சுற்றியுள்ள ஒளியை விட 3 மடங்கு வலிமையாக இருக்க வேண்டும். கண்கள் ஓரே சம நிலையில் அல்லது கொஞ்சம் கீழே திரையை பார்க்க வேண்டும். கண்களுக்கும் கணிகணி திரைக்குமிடையிலான தொரைவு 60 சென் மீட்டருக்கு மேல் நிலைநிறுத்த வேண்டும். தவிர, கணிணி மூலம் வேலை செய்யும் போது வேண்டுமென்றே கண்களை மின்னி கண் மருந்தை போட்டி கண்களை ஈரமாக நிலைநிறுத்த வேண்டும். நான் சொன்னது கணிணி பயன்படுத்தும் போது கண்களில் நிகழ்ந்த கசப்பு உணர்ச்சி குறைக்கப்படும்.

1  2