• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-31 16:54:26    
சீனாவில் புதுவகையான முதியோர் உதவி முறை

cri
மிக புதிதாக வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, தற்போது சீனாவில் ஒவ்வொரு 10 சீனர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோராக இருக்கின்றார். முதுமை என்பது ஒரு பிரச்சினையாகும் நிலையில், சீனாவில் முதியோர் உதவி என்பது புறக்கணிக்க முடியாத ஒரு பிரச்சினையாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் நிலைமைக்கேற்ற முறையில் முதியோருக்கு பொருளாதார உதவி வழங்கிட அரசுத் துறைகள் பாடுபட்டு வருகின்றன. முதியோர்கள் அவர்களது வீட்டிலேயே வசிக்க உதவுவது இவற்றில் ஒன்றாகும்.

முதியோருக்குச் சேவை புரியும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் அரசு நிதி ஒதுகீடு செய்து, அவர்களை அல்லல்படும் முதியோர்களின் குடும்பங்களுக்கு அனுப்பவது இந்த வழிமுறையின் தனிச்சிறப்பாகும். பணியாளர்கள் முதியோரின் அன்றாட வாழ்க்கையைக் கவனித்து, சொந்த வீட்டினலேயே முதியோர்கள் மகிழ்ச்சியாக வாழ உதவி செய்கின்றனர். சமூக சேவை, வீட்டிற்குச் சென்று உதவி செய்து, சொந்த வீட்டில் தங்குவது ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய முதியோர் உதவி முறை இதுவாகும்.

79 வயதான Tan jianzhou தம்பதி சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள தா லியேன் நகரில் வசிக்கின்றனர். இந்த அழகான நகரில் பல முதியோர் உதவி மையங்கள் உள்ளன. ஆனால், வீட்டிலேயே தங்கி இருப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். சொந்த வீட்டில் கட்டுப்பாடு எதுவும் இன்று இருக்கலாம் என்று திரு Tan கருதினார்.

சொந்த வீட்டில் வந்து போய், ஓய்வு எடுப்பது, சாப்பிடுவது, தொலைக்காட்சி அல்லது வானொலி நிகழ்ச்சிகளை ரகிப்பது முதலியவற்றில் சுதந்திரமாக இருக்கலாம். முதியோர் உதவி மையத்திலும் தொலைக்காட்சி பெட்டி உண்டு. ஆனால், ஒருவருக்கு என்று தனியாகக் கிடைக்காது. விளையாட்டுப் போட்டிகளைக் கண்டுகளிக்க நான் மிகவும் விரும்புகின்றேன். அடிக்கடி நள்ளிரவில் எழுந்து நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். முதியோர் மையத்தில் இவ்வாறு செய்வது சரியில்லை என்றார் அவர்.

இந்தக் குடியிருப்புப் பிரதேசத்தில் தான் பத்துக்கும் மேற்பட்ட மேலான ஆண்டுகளாக வசித்து வருகின்றார். அருகே வசிப்பவர்களுடன் மகிழ்ச்சியுடன் பழகுவதாக திரு தென் கூறினார். ஒவ்வொரு நாளும், அருகே வசிப்பவர்களுக்கு நட்பாக வணக்கத்தை தெரிவித்து, குடும்ப விஷயங்கள் பற்றி விவாதிக்கலாம். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், முதியோர் உதவி மையத்தில், பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்களின் விருப்பங்கள் வேறுப்பட்டவை. விரைவில் இயல்பாக பழகிவிட முடியாது. திரு தென் காய்கறி உணவை விரும்புகின்றார். இறைச்சியை விரும்புவதில்லை. வீட்டிலேயே இருந்தால், சொந்த சுவைப் படி சமைக்கலாம். தவிர, பிள்ளைகள் நேரம் இருந்தால், வீட்டுக்கு வந்து அவர்களைப் பார்க்கின்றனர். வீட்டில் உள்ள இந்த சூழ்நிலை முதியோர் மையத்தில் கிடைக்காது என்று திரு தென் கருதுகின்றார்.

1  2