• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-31 16:54:26    
சீனாவில் புதுவகையான முதியோர் உதவி முறை

cri

பாரம்பரிய சீன குடும்பத்தில், குடும்ப உறுப்பினர்கள், பிள்ளைகள் ஆகியோரின் உதவியுடன் முதியோர்கள் வாழ்கின்றனர். ஆனால், தன்னால் பிள்ளைகளின் வாழ்வுக்கும் பணிக்கும் பாதிப்பு ஏற்படுவதை தாமும் துணைவியரும் விரும்பவில்லை என்று திரு தென் கூறினார்.

ஆகையால், திங்களுக்கு 400 யூவான் செலவிட்டு, ஒரு குடும்ப சேவை பணியாளரை திரு தென் அழைக்கின்றார். இத்தகைய பணியாளர்கள் முதியோர்களின் பழக்க வழக்கங்கள் பற்றி படித்துத் தெரிந்துள்ளனர். தா லியேன் நகரின் உள்ளூர் விதிகளின் படி, Tan Jianzhou போன்ற 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு குடும்ப சேவை பணியாளர்களை அழைப்பதற்காக அரசு திங்களுக்கு 100 யுவான் உதவி வழங்குகின்றது.

தா லியேன் நகரை விட, சில நகரங்கள் மேலும் சிறப்பாக செய்கின்றன. கிழக்கு நகரான நிங் போ, தெற்கு நகரான குவான் சோ ஆகியவற்றில், தனியாக வாழ்கின்ற அதிக வயதான முதியோர், அரசு வழங்கும் இலவச குடும்ப சேவை அனுபவிக்கலாம்.

குவான் சோ நகரில் வசிக்கும் Tan Hui Fang மூதாட்டிக்கு 90 வயதாகின்றது. அவருக்குப் பிள்ளைகள் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் கணவன் காலமானார். தற்போது, அவரின் உடல் நலமாக இருந்து, சுயேச்சையாக வாழலாம். இருந்த போதிலும், அரிசி, கோதுமை மாவ் ஆகியவற்றை வாங்குவது, வீட்டில் சுத்தம் செய்வது ஆகிய கடுமையான வேலை செய்தால், அவருக்கு கோர்வு உண்டாகின்றது. அண்மையில், உள்ளூர் அரசு அவருக்கு ஒரு குடும்ப சேவை பணியாளரை அனுப்பியதும், இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன.

வீட்டில் சுத்தம் செய்வதைத் தவிர, குடும்ப சேவை பணியாளர் மருத்துவமனைக்குச் செல்லும் போது உடன் செல்கின்றார். தனக்கு பல அன்றாட வேலைகளை செய்கிறார். இவற்றுக்காக பணம் கொடுக்க வேண்டியதில்லை என்று Tang Hui Fang கூறினார்.

90 வயதிலே இவ்வாறு வழ்வது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். எனக்கு உடன்பிறப்புக்கள் இல்லை. ஆனால், அருகே வசிப்பவர்கள் என்னை மிகவும் கவனிக்கின்றனர். தற்போது, அரசு எனக்காக குடும்ப வேலை பணியாளரை அனுப்புகின்றது. இந்த பணியாளர் பணியை செவ்வனே செய்கின்றார் என்றார் அவர்.

இந்த மூதாட்டிக்கு சேவை புரியும் பணியாளரின் பெயர் Liang kun yan. அவருக்கு 39 வயதாகின்றது. முன்பு ஒரு சிற்றுண்டியில் பணி புரிந்திருக்கின்றார். ஆனால், வேலை இழந்துவிட்டார். முதியோருக்குச் சேவை புரிவதை தனது பணியாகக் கருதும் அவர் இப்போது மிகவும் மகிழ்ச்சி அடைகின்றார். அவர் கூறியதாவது,

இவ்வாண்டின் ஜனவரி திங்கள் முதல், இப்பணியில் ஈடுபடத் துவங்கினேன். இதற்கு முன், குவான் சௌ நகரின் பொது நலன் மையத்தில் பயிற்சி பெற்றேன். முதியோருக்கு மேலும் சிறப்பாகச் சேவை புரியும் வகையில், முதியோர் நோய் பற்றி முக்கியமாகக் கற்றுக்கொண்டேன் என்றார் அவர்.

முதியோருக்குச் சேவை புரியும் அதேவேளையில், தனது வேலை பிரச்சினையும் தீர்க்கப்பட்டது. தற்போது, ஒவ்வொரு திங்களும் அவர் உள்ளூர் பொது நலன் அலுவலகத்திலிருந்து ஊதியம் பெறுகின்றார்.

இத்தகைய முதியோர் உதவி முறையால், சமூகத்தில் புதிய வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், அரசின் சுமையும் குறைத்துள்ளது. சாதாரண முதியோர் உதவி மையங்களை விட இதன் செலவு குறைவு என்று மதிப்பிடப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, நிங் போ நகரில், அடிப்படை வசதி படைத்த ஒரு முதியோர் உதவி மையத்தைக் கட்டியமைப்பதற்கு, திங்களுக்கு ஒரு படுக்கைக்கு அரசு குறைந்தது 250 யுவான் முதல் 500 யுவான் வரை ஒதுகீடு செய்ய வேண்டும். ஆனால், புதிய வகையில் அரசு 165 யுவான் மட்டும் ஒதுகீடு செய்தால் போதும்.

சீன பொது நலன் அமைச்சின் சமூக பொது நலன் மற்றும் சமூக விவகார பிரிவின் துணைத் தலைவர் Yan QingChun கூறியதாவது,

தற்போது, சீனா வளம் அடையவில்லை. இந்த நிலைமையில், அரசு அல்லது சமூக ஆற்றலைச் சார்ந்து, பல சிறந்த வசதி படைத்த பல பொது நலன் மையங்களை நிறுவி, இவ்வளவு அதிகமான முதியோர்களின் தேவையை நிறைவேற்றுவது நடைமுறை சாத்தியமில்லை. எனவே, சொந்த வீட்டிலேயே முதியோர் வாழ உதவும் வழிமுறை சீன நாட்டின் நிலைமைக்கேற்றது என்றார் அவர்.


1  2