• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-02 18:12:28    
மங்கோலிய இனத்தின் பாரம்பரிய பாடல் வடிவம்

cri

எல்லையற்ற புல்வெளி

சீனாவின் மங்கோலிய இனம் தலைமுறை தலைமுறையாக வடக்கிலுள்ள விசாலமான புல்வெளியில் வாழ்ந்து வருகின்றது. நாடோடி வாழ்க்கை நடத்தும் இவ்வின மக்கள், தனிச்சிறப்புமிக்க புல்வெளி பண்பாட்டினை தோற்றுவித்தனர். புல்வெளி, குதிரை, நீள்ராகம் ஆகியவை மங்கோலிய இனத்தவரின் மூன்று மதிப்புள்ள பொருட்களாகும். இவற்றினால், அவர்களின் செம்மையான ஊர் உருவாயிற்று.

மங்கோலிய இன மக்கள் ஒளிவுமறைவு இல்லாதவர்கள். அவர்கள் விசாலமான புல்வெளியில் வாழ்கின்றனர். தனித்தன்மை வாய்ந்த இந்த வசிப்பிடச் சூழல் காரணமாக தேசிய இன தனிச்சிறப்புமிக்க பாடல் வடிவமான நீள்ராகம் உருவெடுத்துள்ளது. தனிச்சிறப்புடைய இப்பாடல் வடிவம், இலயமான நடையில், மங்கோலிய மக்களின் தாரளமான மனப்பாங்கை வெளிப்படுத்துகின்றது.

பச்சை பசேல் என்ற புல்வெளி, வானில் பஞ்சுப்பொதியாய் மிதக்கும் வெள்ளை மேகத் துண்டுகள், அங்குமிங்குமாக புல் மேயும் ஆடுமாடுகள், பால் வெள்ளை நிறமுடைய மங்கோலிய கூடாரங்கள்—இவை. இந்த இனிமையான இசை ராகத்தைக்கேட்டதும், இவை படம் போல கண்முன் விரிகின்றன. சூரியன் அஸ்தமனமாகும் வேளையில், தொலைவிலுள்ள மலைகளில் வண்ண வண்ணத்து ஆடைகள் போடப்படுவது போல், ஆடுமாடுகளின் உடலில் தங்க ஓரம் அலங்கரிக்கப்படுவது போல், ஆகாயத்தில் மேகத் துண்டுகள், தீ புகை சிவப்பு நிறம் போல் காட்சியளிக்கின்றன.

1  2  3