• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-02 18:12:28    
மங்கோலிய இனத்தின் பாரம்பரிய பாடல் வடிவம்

cri

புகழ் பெற்ற பாடகர் Hajab

இத்தகைய நிலையில், செவியில் ஒலிக்கும் மங்கோலிய இன நீள்ராகப் பாடல்கள், புல்வெளியின் புதல்வர் புதவிகளின் தனித்துவம் வாய்ந்த ஆழ்ந்த உணர்ச்சியை பிரதிபலிக்கின்றன. ஓரிரு பாடல் வரிகளுடைய இத்தகைய நீள்ராகத்தை ஆயர்கள் விரும்பியவாறு பாடலாம். ஆயர்கள், சொந்த அனுபவம், இயற்கை மீதான தத்தமது உணர்ச்சிகள் ஆகியவற்றின் படி அவ்வப்போது பாடலாம். புல்வெளி, குதிரை, ஓட்டகம், ஆடுமாடு, நீல வான் வெள்ளை மேகம், ஆறு நதி முதலிய இயற்கைக் காட்சிகளையும் காதலையும், பாடல்வரிகள் வர்ணிக்கின்றன. Matouqin எனும் ஒருவகை இசைக் கருவியின் பக்க வாத்திசையின் உதவியுடன், நீள்ராகம் மேலும் அருமையாகி, புல்வெளியின் வானிலேயே மிதந்து பறக்கின்றது.

Bointu எனும் முதியோர், முழுக்க முழுக்க ஒரு ஆயர் ஆவார். வாழ்நாள் முழுவதிலும் அவர் குதிரைகளை வளர்த்து வந்தார். அன்றி நீள்ராகத்தில் பாடி வந்துள்ளார். 66 வயதான போதிலும், தமது குதிரைகளை நேசிப்பது போல் அவர் நீள்ராகப் பாடல்களைப் பாட விரும்புகின்றார். அவர் கூறியதாவது:

"நான் நீள்ராகத்தை விரும்புகின்றேன். பாடவும் விரும்புகின்றேன். நீள்ராகத்தில் பாடி வருவதன் மூலம் மங்கோலிய இனத்தின் தலைமுறையினருக்கு மதிப்புள்ள சிலவற்றை கொடையாக வழங்க விரும்புகின்றேன். இப்போது நான், சிறப்பாக, இடைநிலை மற்றும் துவக்க நிலைப் பள்ளி மாணவருக்கு நீள்ராகத்தை சொல்லிக்கொடுக்கின்றேன். நீள்ராகம் மறையாமல் இருக்க, நான் இலவசமாக சுயவிருப்பத்துடன் இவற்றை செய்கின்றேன்" என்றார், அவர்.

புகழ் பெற்ற பாடகி Baoyindeliger

மங்கோலிய இன ஆயர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை முறையின் மாற்றத்துடன், நீள்ராகம் சார்ந்திருக்கும் இயற்கைச்சூழலில் மாற்றம் காணப்பட்டுள்ளது. பாரம்பரிய புல்வெளிப் பண்பாடு, அழியும் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றது. நீள்ராகக் கலையை, நிரந்தரமாக பரவச்செய்திடும் வகையில், மேன்மேலும் அதிகமாகி வருவோர் தாங்களாகவே பாடச்சொல்லிக் கொடுக்கின்றனர். பாடக் கற்றுக்கொள்கின்றனர்.

Naserin என்ற பெயருள்ள 11 வயது குழந்தை, சிறு வயதிலேயே தனது தந்தையிடமிருந்து நீள்ராகத்தைப்பாடக் கற்றுக்கொண்டு, நல்ல குரல் பயிற்சி பெற்றது. பாடுவது என்பது, இளக்கமான, மகிழ்வான விஷயம் என்று அது கூறியது. குழந்தைகள் நீள்ராகத்தை விரும்பி இதை பரவச் செய்வதும், சொந்த இனத்தின் பண்பாட்டினை ஏற்றுக்கொள்வதும், மிகழ்ச்சியூட்டும் ஒரு விஷயம் என்று பெரும்பாலான அவரது ஊர்வாசிகள் கருதுகின்றனர். பு டு தே அம்மையார், உள்மங்கோலியாவில் புகழ் பெற்ற நீள்ராகப்பாடகியாவார். அவர் கூறியதாவது:

"எங்கள் மாவட்டத்தில், மங்கோலிய இனத்தின் நீள்ராகம் மிகவும் பிரபலமானது. வயதான நாங்கள் பாடுகின்றோம். அன்றி, எங்களின் தலைமுறையினரின் குழந்தைகளும் பாடத் துவங்கினார்கள். அவர்களுக்கு பாடச் சொல்லிக் கொடுக்கவும் விரும்புகின்றோம்" என்றார், அவர்.

1  2  3