• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-06 10:21:03    
சீனாவில் புதிய மருந்துகளின் ஆராய்ச்சி

cri

பொது மக்களின் உடல் மற்றும் மருந்து உற்பத்தித் தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப கடந்த சில ஆண்டுகளில் புதிய மருந்துகளின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை சீனா வலுப்படுத்தியுள்ளது. இதனால் ஒரு தொகுதி புதிய மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்போது இது பற்றி பார்ப்போம் மருந்துகளின் ஆராய்ச்சி மர்றும் பயன்பாடு ஒரு சிக்கலான நீண்டகால போக்காகும். அதற்கு பெரும்தொகை நிதி சாதனங்கள் தரமிக்க ஆய்வாளர்கள் தேவை. சில மருந்து களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு 10 கோடி முதல் பல பத்து கோடி அமெரிக்க டாலர் முதலீடு தேவைப்படுகின்றது. பொதுவாக 5-10 ஆண்டுகாலம் அதற்கு தேவைப்படுகின்றது என்று சில வெளிநாட்டு அனுபவம் கூறுகின்றது.

நவ சீனா நிறுவப்பட்ட துவக்கக் காலத்தில் நாட்டின் ஆற்றல் பலவீனமாக இருந்தது. தொழில் நுட்பமும் பின் தஹ்கிய நிலையில் இருந்தது. பல கோடி மக்களின் உடல் நலத்துக்காக சீனா புதிய மருந்துகளின் ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டுத்துரையில் காப்பி அடிக்கும் முறையை அதாவது ஆராய்ச்சி மூலம் சில வெளிநாட்டு மருந்துகளின் ரசாயன பகுதிகளைப் புரிந்து கொண்டு பின் மருந்துகளை தயாரித்தது. இதனால் சீனாவில் உயிர் எதிரி மருந்து உள்ளிட்ட அடிக்கடி ஏற்படும் நோய்களைச் சிகிச்சை செய்யும் மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் தொடர்ச்சியாகவும் விரைவாகவும் வளர்ச்சி கம்டு வருகின்றது. நாட்டின் ஆற்றல் குறிப்பிடத் தக்க அளவில் நலுவடைந்துள்ளது. அறிவியல் தொழில் நுட்பமும் மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. மருந்துகளின் ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டுப் பணியும் மேன்மேலும் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2000ம் ஆண்டு சீனா அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம் புதிய மருந்துகளை உருவாக்குவது என்ற முக்க்ிய ஆராய்ய்சி துறையை நிறுவியுள்ளது. அதன் நடைமுறை காலம் 5 ஆண்டுகள். சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அதிகாரி வாங் சியோ பாங் இத்துறைக்குப் பொறுப்பாளர்களில் ஒருவர். அவர் கூறியதாவது சீனா சுயமாக புதிய மருந்துகளை ஆராய்ந்து வளர்க்கும் அமைப்பு முறையை பூர்வாங்க ரீதியில் நிறுவி முழுமைப்படுத்தி சுயேச்சையான உள்நாட்டுத் தொழில் நடுபம் மூலம் புதிய மருந்துகளை உருவாக்கி பொது மக்களின் உடல் நலம் மற்றும் மருந்தாக்கத் தொழில் வளர்ச்சியின் தேவையை நிறைவு செய்து புதிய சீன மருந்துகளின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முறையை காப்பி அடிக்கும் முறையிலிருந்து புதுமையாக்கத்துக்கு மாற்றுவதை விரைவுபடுத்தி கூடியவிரைவில் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த மருந்தாக்கத் தொழிலை உருவாக்குவது என்பது இந்தத் துறையை நிறுவுவதன் நோக்கமாகும் என்றார் அவர்.

1  2