• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-06 10:21:03    
சீனாவில் புதிய மருந்துகளின் ஆராய்ச்சி

cri

இதற்காக சீன அரசு 80 கோடி யூவானை முதலீடு செய்துள்ளது. 4 ஆண்டுகளின் முயற்சிக்குப் பின் இத்துறையின் பல்வேறு ஆராய்ச்சி பணியும் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. முக்கிய சாதனைகளும் பெறப்பட்டுள்ளன. குறைவான முதலீடு விரைவில் பயன் தருவது ஆகிய புதிய பாதை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்துறையில் 22 வகை புதிய மருந்துகள் புதிய மருந்து சான்றிதழ்களையும் உற்பத்திக்கான அனுமதி பத்திரங்களையும் பெற்றுள்ளன. தவிர 140 வகை மருந்துகள் சோதனைக் கூட ஆய்வில் உள்ளன. அல்லது அவற்றின் ஆராய்ச்சி பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. புதிய மருந்து சான்றிதழ்களைப் பெற அவை விண்ணப்பிக்கின்றன.

எடுத்துக்காட்டாக தாய்சிங்சென் எனப்படும் ஒரு வகை மருந்து புற்று நோய் சிகிச்சை செய்யக் கூடிய மருந்தாகும். இம்மருந்தை ஆராய்ந்து தயாரிக்கும் பைய்தாய்சென் மருந்தாக்க நிறுவனத்தின் தலைமை இயக்குநர் பைய் சிங் ஹொங் கூறியதாவது இந்த மருந்து மனித உடலுக்குள் நுழைந்த பின் கட்டி சேல்களுடன் ஒன்றிணையும். இதர சேல்களுக்கு பக்க விளைவு ஏற்படாது. எனவே வழக்கமான எக்ஸ் கரதிர்வீச்சு மூலம் அல்லது ரசாயன மருத்துவ சிகிச்சை முறைகளை விட சிறந்தது. இம்மருந்து முக்கியமாக கழுச்சில் ஏற்படும் கட்டிகளைச் சிகிச்சை செய்ய பயன்படும் என்றார் அவர்.

பெருவாரியான புதிய மருந்துகளை உருவாக்கும் அதேவேளையில் இத்துறை புதிய மருந்துகளின் ஆராய்ச்சி மர்றும் வளர்ச்சியின் முக்கியமான தொழில் நுட்பத்தின் மீது பெரும் கவனம் செலுத்துகின்றது. சீன நாட்டின் நிலைமைக் கேற்ற புதிய மருந்துகளைசத் தயாரிப்பது பற்றிய ஆராய்ச்சி அமைப்பு முறையை உருவாக்கம் அது அரும் பாடுபட்டு வருகின்றது. சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் துணை அமைச்சர் லியூ யென் கூவா கூறியதாவது மருந்துகளின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் சீனா பல்லாண்டுகளாக முயனஅறுவருவதால் சிறப்பான சூழலை உருவாக்கியுள்ளது. அதற்கான வாய்ப்புகளையும் தந்துள்ளது. அதற்கான முதலீடும் படிப்படியாக அதிகரித்துள்ளது. இதனால் சீனாவின் மருந்துகளின் ஆராய்ச்சி மர்றும் திறமை புதிய வளர்ச்சி காலக் கட்டத்தில் நுழைந்துள்ளது என்றார் அவர்.

புதிய மருந்துகளை படைப்பதென்ற முக்கியமான ஆராய்ச்சி திட்டப் பணி இவ்வாண்டு இறுதியில் முடிவடையும். இத்திட்டப் பணி இவ்வாண்டு இறுதியில் முடிவடையும். இத்திட்டப் பணி சிறந்த பயனைப் பெற்றுள்ளதால் இதன் அனுபவத்தைத் தொகுத்து ஆராய்ந்த அடிப்படையில் தொடர்ந்து பல்வகை நடவடிக்கைகளை மேற்கொண்டு சீனா புதிய மருந்துகளின் ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டுப் பணிக்கு பெரும் மூச்சுடன் ஆதரவளிக்கும். இவ்வாறு மேலும் கூடுதலான நல்ல பயன் பெறவும் பக்க விளைவு குறைவாகவும் விலை குறைவாகவும் உள்ள புதிய மருந்துகள் வளர்க்கப்பட முடியும் என்று துணை அமைச்சர் லியூ யென் குவா தெரிவித்தார்.


1  2