• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-12 22:38:17    
அழகாக இருக்க சாக்லெட் குளியல்

cri

கட்டாய கல்யாணம்

எத்திபோப்பியா நாட்டில் ஏழு கோடி மக்கள் வசிக்கின்றார்கள். இந்த நாட்டின் பெரும்பாலான கிராமப்புறங்களில் இன்றளவும் சிறுமிகளுக்கு கட்டாயத் திருமணம் நடத்தி வைக்கப்படுகின்றது.

முப்பது சதவீத சிறுமிகளுக்கு, அவர்கள் பதினாங்கு வயதை எட்டும் முன்னரே திருமணம் நடந்து முடிந்து விடுகின்றது.

திருமணத்திற்கு உட்படாதவர்களின் குடம்பத்தினரது சிறுமிகளை கடத்திச் சென்று கட்டாய கல்யாணம் செய்து வைப்பதும் அங்கே அதிகம். அரசாங்கம் எவ்வளவோ சட்ட திட்டங்களை வகுத்தும் கிராம மக்களிடையே அங்கு விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை.

திருமணம் நடந்த அன்று கைதான மாப்பிள்ளை

செப்பியா நாட்டில் திருமணத்தின் போது மாப்பிள்ளை ஒரு ஆப்பிளை துப்பாக்கியால் சுட வேண்டும் என்பது அந்த நாட்டுப் பார்பரியம் ஆகும்.

இதன்படி நாற்பதேழு வயது மாப்பிள்ளை ஒருவர் தன் திருமணத்தின் போது ஒரு ஆப்பிளை துப்பாகியால் சுட்டார். ஆப்பிளைச் சுடுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பிஸ்டலுக்குப் பதிலாக ஷாட்கன்னைப் பயன்படுத்தினார். குண்டு தெறித்து பக்கத்தில் இருந்த 15 பேர் லேசான காயம் அடைந்தனர்.

இது பற்றி போலீசல் புகார் செய்யப்பட்டது. போலீசார் மணமகனை கைது செய்தனர். முதல் இரவில் மனைவி பக்கத்தில் இருக்க வேண்டியவர் ஜெயிலில் பொழுதை கழித்தார்.

பீர் இல்லாமல் விருந்தா

பெல்ஜியம் நாட்டுக்கு ஈறான் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்று இருந்தது. அவர்களுடன் பெல்ஜியம் எம்.பி.க்கள் ஒரு விருந்தில் சந்தித்துப் பேசுவதாக இருந்தது.

நாங்கள் முஸ்லிம்கள் மது அருந்தமாட்டோம். எனவே, விருந்தில் கல்நது கொள்ளும் பெல்ஜியம் எம்.பி.க்களும் மது அருந்தக்கூடாது என்று தடை விதித்தனர்.

பீர் குடிப்பதை அதிகம் விரும்பும் பெல்ஜியம் நாட்டினரான எம்.பி.க்கள் மது பானம் இல்லாமல் விருந்தா? அப்படிப்பட்ட விருந்து எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் விருந்து ரத்தாகிவிட்டது.


1  2