• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-14 13:50:26    
லோப இன மக்கள் பேரவை பிரதிநிதி-ஸியோ ஹொங்

cri

ஸியோ ஹொங் மற்றும் இதர பிரதிநிதிகள்

சீன திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் மூவாயிரம் மக்கள் தொகை கொண்ட சிறுபான்மை தேசிய இனமான லோப இனம் உள்ளது. மக்கள் தொகை மிக்க குறைவு என்ற போதிலும், அவர்களிடையே தேசிய மக்கள் பேரவை பிரதிநிதி ஒருவர் இருக்கின்றார். அவருடைய பெயர், ஸியோ ஹொங். இந்த அம்மையார் திபெத்தில் மிகவும் பிரபலமானவர். அவரது ஊரான மிங் லின் மாவட்டத்தை ஒவ்வொரு குடும்பமும் அறியும். இந்த 30 வயதான லோப இன மங்கை, பணியில் தேர்ச்சி பெற்றவர். தரையில் காலூன்றி செயல்படுபவர். உள்ளூர் மக்களிடையே நன்கு பாராட்டப்படுபவர். இன்று, திபெத்தின் லோப இனத்தின் இந்த ஒரே ஒரு தேசிய மக்கள் பேரவை பிரதிநிதியை அறிந்து கொள்வோம்.

மிங் லின் மாவட்டம், தென் கிழக்கு திபெத்தில் அமைந்துள்ளது. அவரும் பத்துக்கும் அதிகமான லோப இனக் குடும்பங்களும் மாவட்டத்தின் அப்பாலுள்ள மலைச்சரிவில் வசிக்கின்றனர். அங்கு காடுகள் அடர்ந்துள்ளன. தொலைவில் யலுஜாம்பு ஆறு அமைதியாக ஓடுகின்றது. ஸியோ ஹொங் வீட்டிற்கு சென்ற போது, அவர், புதிய வீட்டை அலங்கரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். வீட்டு வாசலில் பச்சை கிளி ஒன்று விருந்தினரை கண்டு, உரக்க கீச்சிட்டது. முற்றத்தில் சில கோழிகள் கொக்கரித்து எங்கள் செய்திமுகவரை வரவேற்றன.

லோப இன குழந்தைகள்

ஸியோ ஹொங்கின் தந்தை-தாய் உள்ளூர் விவசாயிகளாவர். 1966ம் ஆண்டு திபெத் வேளாண்-கால் நடை வளர்ப்புக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, மிங் லின் நகரில் அரசு பணியாளரானார். நான்கு ஆண்டுகளுக்கு பின் நகரின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். 2003ம் ஆண்டு பத்தாவது தேசிய மக்கள் பேரவை பிரதிநிதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லோப இனத்துக்கு தனியாக ஒரு சொந்த மொழி உண்டு. இருப்பினும் எழுத்துகளில்லை. நீண்டகாலமாக மலைகளில் வாழ்ந்து வருவதினால், லோப இன மக்களின் குடியிருப்பின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் பின்தங்கிய நிலையில் இருந்தது. 1959ம் ஆண்டு திபெத்தில், ஜனநாயக சீர்திருத்தம் நடைபெற்று, பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின் இந்த நிலைமையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டது. அப்போது முதல், திபெத்தின் இதர சிறுபான்மை தேசிய இனங்களைப் போல, லோப இனமும் சம அரசியல் உரிமை, பொருளாதார உரிமை மற்றும் தனிநபர் சுதந்திர உரிமையைப் பெற்றுள்ளனர்.

1  2  3