• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-25 17:16:04    
பாதங்கள் பாதுகாப்பு

cri
பாதங்களை பாதுகாப்பு பற்றிய சில குறிப்புக்கள் பற்றி நினைவு கூறுகின்றேன்.

பாதங்களை பராமரிப்பது பற்றி ஏற்கனவே நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளோம். இரந்தபோதிலும் இன்றைய நிகழ்ச்சியில் மருத்தவர் ஒருவரிடமிருந்து பெற்ற சில கூடுதல் குறிப்புக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இவற்றைக் கேளுங்கள்.

பாதம் நமது உடலின் ஒரு முக்கிய பகுதி என்பதை மெரும்பாலானோர் புரிந்து கொள்வதில்லை. பாதங்களும் நமது உடலின் ஒரு முக்கிய பகுதி என்பதை அறிந்து அதை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க பின் வரும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

1. தினந்தோறும் எவ்வளவு தூரம் காலாற நடக்கிறீர்களோ அது உங்கள் பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஏனென்ில் நடைப் பயிற்சி பாதங்களின் இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. பாதங்களின் தசை நார்களை உறுதி செய்து இரத்த ஓட்டத்தை கட்டுக்குள் வைத்து உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளவும் இது உதவுகின்றது.

2. காலணிகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். உடலுக்கு வலி ஏற்படுத்தும் அவகான காலணிகளை விட காலுக்கு பொருத்தமான வசதியான காலனிகளே மேல். இயன்றவரை தோலால் செய்யப்பட்ட காலணிகளை பயன்படுத்துவது நல்லது. குதிகாலுயர்ந்த காலணிகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

1  2