• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-28 21:29:48    
சீனாவில் மக்கள் தொகை குறைவான மாவ் நன் தேசிய இன வாழ்க்கை

cri

Bu Lang இன நங்கைகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு, தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தில் வாழும் Bu Lang மற்றும் Ji Nuo இனத்தவர்களின் வாழ்க்கையில் இடர்கள் மிகுதியாக இருந்தன. உள்ளூர் அரசு ஆராய்ந்த பின், அவர்கள் வாழும் இடங்களிலான Bu Lang மலை மற்றும் Ji Nuo மலையில் தேயிலைத் தோட்டம் போடலாம் எனக் கண்டறியப்பட்டது.

"அவ்விடங்கள் தேயிலைச் செடிகள் நடுவதற்கு மிகவும் பொருத்தமானவை. தேயிலை தொழில் வளர்ப்பதில் நாங்கள் அவர்களுக்கு உதவிடுகின்றோம். அன்றி, வெளிப்புற தொழில் நிறுவனங்கள் தேயிலை பதனிட இங்கு வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது தேயிலை, தேவைக்கு போதாது என Ji Nuo மலை தோழர் தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.

Ji Nuo இன நங்கைகள்

சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு தனிச்சிறப்பு மிக்க பாரம்பரிய பண்பாடு உண்டு. மக்கள் தொகை குறைவான இந்த 22 தேசிய இனங்களின் பாரம்பரிய பண்பாட்டைப் பாதுகாப்பது, ஒப்பீட்டளவில் பலவீனமாகவே உள்ளது. இதற்காக சீன அரசு எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். யாங் ஜின் ச்சிக கூறியதாவது:

"முதலாவது. சட்டங்களையும் சட்டவிதிகளையும் வகுத்து அவற்றைக் கொண்டு சிறுபான்மை தேசிய இனங்களின் பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும். இரண்டாவது. உரிய நிறுவனங்களை அமைத்து, வசதிகளை நிறுவி, பண்பாட்டுத் துறையின் அடிப்படை வசதி நிர்மாணத்தை வலுப்படுத்த வேண்டும். மூன்றாவது. சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு, கலை இலக்கியம் ஆகிய துறைகளின் திறமைசாலிகளைப் பயிற்றுவிக்க வேண்டும். நான்காவது. அழியும் அபாயத்தில் உள்ள சிறுபான்மை தேசிய இனங்களின் பண்பாட்டினை, முதல் உதவி போன்று காப்பாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." என்றார், அவர்.

அடுத்த ஐந்தாண்டுகளில், இவ்வினங்களின் இருப்பிடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அங்குள்ள மக்களின் உற்பத்தி வாழ்க்கையில் நிலவும் கடும் பிரச்சினைகளைத் தீர்க்க, சீன அரசு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.


1  2  3