• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-02 08:30:53    
இணைய விளையாட்டுகளில் மாணவர்கள் மூழ்காமல் தடுக்கும் நடவடிக்கைகள்

cri

சீனாவில், குழந்தைகளின் வளர்ப்பில் குடும்பக் கல்வியின் பங்கு பற்றி மிகவும் அக்கறை செலுத்தப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக இணைய விளையாட்டுக்கள் அதிக இளைஞர்களை ஈர்த்துள்ளன. அவர்களில் சிலர் சுய கட்டுப்பாடு இல்லாமல், இணையத்திலேயே மூழ்கி, கல்வியைப் புறக்கணிக்கின்றனர். இதனால், பெற்றோர்கள் மிகவும் கவலைப்படுகின்றனர். இந்தக் கவலையைத் தீர்க்கும் வழிமுறை குறைவாக உள்ளது. கடந்த 20ந் நாள் சீன அரசின் செய்தி வெளியீட்டு அலுவலகம், இணைய விளையாட்டுகளில் மாணவர்கள் மூழ்காமல் தடுக்கும் நடவடிக்கைகளை தொகுத்து வெளியிட்டது. இது இப்போது சீனாவில் மிக பெரிய 7 இணையதள விளையாட்டு உற்பத்தி நிறுவங்களின் 11 புகழ்பெற்ற இணைய விளையாட்டுகளில் பயன்படத் துவங்கியுள்ளது. குழந்தைகள் பற்றி கவலைப்பட்ட பெற்றோர்கள் இதை மிகவும் பாராட்டுகின்றனர்.

இத்தொகுதியின் விதிகளின் படி, இணைய விளையாட்டுகளில் தொடர்ச்சியாக 3 மணி நேரம் ஈடுபட்டால், செய்முறைப் பயிற்சி மதிப்பெண் 50 விழுக்காடு குறைக்கப்படும். 5 மணி நேரம் விளையாடினால், மதிப்பெண் பூஜியமாக மாறும். மதிப்பெண்களைக் கட்டுப்படுத்துவதன் முலம் விளையாட்டுக்களில் ஈடுபடுகிறவர்களின் விளையாடும் நேரத்தைக் குறைப்பது இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும்.

1  2