• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-02 08:30:53    
இணைய விளையாட்டுகளில் மாணவர்கள் மூழ்காமல் தடுக்கும் நடவடிக்கைகள்

cri

இதற்கு பல பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர் பேசுகையில், இணைய விளையாட்டுக்களில் மூழ்கிவிட்ட மகனைக் காப்பாற்ற இயன்ற அனைத்தையும் செய்ததாகக் கூறினார். இணையம் பற்றிய அறிவாற்றலை முயற்சியுடன் கற்றுக்கொண்டு, விளையாட்டுகளில் ஈடுபட்டார். ஆனால், மகனின் தரத்தை எட்ட முடியவில்லை. மகனைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை என்று அவர் சொன்னார். இந்த நடவடிக்கைகளுக்கு உறுதியான ஆதரவு அளிப்பதாக அவர் கூறினார்.

10வது வகுப்பை சேர்ந்த ஒரு மாணவரின் தந்தை கூறியதாவது, மகன் இணைய விளையாட்டுகளில் ஈடுபடாமல் தவிர்க்கும் வகையில், கழிப்பறையில் இருக்கம் நேரம் தவிர, நான் எப்போதும் அவனுடனேயே இருந்தேன். இந்த நடவடிக்கைகள் இப்போது என்னை விடுதலை செய்துவிட்டது என்றார்.

சீன அரசின் செய்தி வெளியீட்டு அலுவலகத்தின் அதிகாரி கோ சியௌ வெய் இந்த நடவடிக்கைகள் பற்றி பேசுகையில், இவை ஓரளவுக்கு இணைய விளையாட்டுகளில் ஈடுபடுகிறவர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியுள்ளது என்று கூறினார். ஆனால், பயன்படுவோரின் நலனை மட்டும் கருத்தில் கொள்ள கூடாது. ஒரு தொழிலின் சீரான வளர்ச்சிக்கு, தொழிலின் நலனையும் சமூக நலனையும் சமமாகக் கருத வேண்டியுள்ளது என்று அவர் கூறினார். இப்பிரச்சினையைத் தீர்க்க, அரசு, தொழில் நிறுவனங்கள், சமூகம் ஆகியவை சேர்ந்து பாடுபட வேண்டும் என்று அவர் கருதுகின்றார்.


1  2