அடுத்து சில நேயர்கள் சிந்தனை கிடங்கு பற்றி விசாரிக்கின்றனர். சிந்தனைக் கிடங்கு எந்பது எதைக் குறிக்கின்றது. இது பற்றி கொஞ்சம் விளக்கம் கூறலாம்.
சிந்தனைக் கிடங்கு என்றால் விவேகம் என்று பொருள்படுகின்றது. இந்தச் சொல்லை அமெரிக்கர்கள் கண்டுபிடித்தனர். 2வது உலக போரின் போது இது தோன்றியது. அப்போது ராணுவ நோக்கிற்காக மட்டும் இச் சொல் பயன்படுத்தப்பட்டது. கடந்த 60ம் ஆண்டுகளில் சிந்தனை கிடங்கு என்ற சொல் எதிர்காலத்திற்கான தெளிவான தன்மை வாய்ந்த ஆய்வாகவும், அரசுக்குக்கு யோசனை கூறும் அரசு சாரா ஆய்வு நிறுவனமாகவும் பொருள்படுகின்றது. 70ம் ஆண்டுகளில் அதன் பொருளின் வரம்பு விரிவாக்கப்பட்டது. நெடுநோக்கு திட்டம், ராணுவம், சர்வதேச உறவு பற்றிய ஆய்வு நிறுவனங்கள் மட்டுமல்ல தற்கால அரசியல், பொருளாதாரம் சமூகம் ஆகியவற்றை ஆராயும் நிறுவனங்களையும் இது குறிக்கின்றது.
சிந்தனைக் கிடங்கு கொள்கை ஆய்வை மையமாக கொண்டு நேரடியைக அல்லது மறைமுகமாக அரசுக்கு சேவை புரியும் நோக்கத்துடன் லாபம் பெறாத சுதந்திர ஆய்வு நிறுவனமாகியுள்ளது. இதிலிருந்து உருவாகும் கொள்கை அரசு தலைவர்களுக்கு செல்வாக்கு ஏற்படுத்தும். மக்களுக்கு வழிக்காட்டும். கொள்கை வீர்மானத்தை உருவாக்கும், தீர்மானிப்பது மதிப்பீடு செய்வது ஆகியவற்றில் சிந்தனைக் கிடங்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.
அமெரிக்காவில் 1000க்கும் அதிகமான சிந்தனைக் கிடங்குகள் உள்ளன. உலகில் மிக அதிகமான சிந்தனைக் கிடங்கு கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கின்றது. அமெரிக்காவில் நாட்டின் 5வது அதிகாரமாக சிந்தனை கிடங்கு கருதப்படுகின்றது. அமெரிக்காவின் லான்ட் நிறுவனத்தை எடுத்துக்காட்டாக கூறினால், 1948ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த கிடங்கு பல ஆண்டுகளாக ஆராயும் பிரச்சினைகள் பல துறைகளுடன் தொடர்புடையவை. ராணுவ வரம்பை பெரிதும் தாண்டியது. விண்வெளி, டிஜிட்டல் கணிணி ஆகிய தொழில் நுட்ப துறைகளிலோ சமூக அரசியல், பொருளாதாரத் துறை ஆகியவற்றிலோ லாண்ட் நிறுவனத்தின் செல்வாக்கு அதிகம். 1 2
|