• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-10 12:47:59    
சுற்றுலா துறையினால் சிங்ஜியாங் மக்களுக்குக் கிடைத்த புதிய வாழ்க்கை

cri

வட மேற்கு சீனாவின் சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், சுற்றுலா வளம் மிக்க வட்டாரங்களில் ஒன்றாகும். இவ்வட்டாரத்தில் புகழ் மிக்க இயற்கை காட்சிகளும், தேசிய இனப் பழக்க வழக்கங்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. கடந்த பல ஆண்டு கால வளர்ச்சியினால், சுற்றுலா துறை, சிங்ஜியாங்கின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கியமான முதுகெலும்புத் தொழில்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. அதே வேளையில், மேன்மேலும் அதிகமான சிறுபான்மை தேசிய இன மக்களும் விரைவாக வளரும் சுற்றுலா துறையினால் பயன் பெற்றுள்ளனர். வட சிங்ஜியாங்கின் கானாஸ் ஏரி, உலகில் புகழ்பெற்ற காட்சி தலமாகும். கானாஸ் ஏரியின் அருகில் வசிக்கும் மங்கோலிய இனத்தைச் சேர்ந்த தூவா பழங்குடி இனத்தவரான முதியவர் யில்தெசி, 13 வயதில் சூழ் என்னும் ஒரு வகை சிறப்பு காற்று இசைக் கருவியை ஊதத் துவங்கினார். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் தமது வாழ்க்கையில் இதன் காரணமாக மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை இந்த முதியவர் எதிர்பார்க்கவே இல்லை.

சூழ் என்னும் காற்று இசைக் கருவி, சீனாவின் தொன்மை வாய்ந்த இசைக் கருவியான சியா போன்றது. அது, கானாஸ் ஏரிக்கு அருகில் வளரும் நாணலின் தண்டுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அதன் அகலம் பெரு விரலை விட பெரியது. பொதுவாக அதன் நீளம் சுமார் 33 சென்டி மீட்டர். அதன் மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும் மொத்தம் 3 துளைகள் போடப்பட்டுள்ளன. சூழ் என்னும் இசைக் கருவியைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பதால் அது தூவா பழங்குடி இனத்தவர்களிடையே மட்டுமே இருந்துவருகின்றது. முதியவர் யில்தெசி, தூவா இனத்தவர்களிடையில் சூழ் என்னும் ஊது குழலை ஊதுவதில் திறமை மிக்கவர். கானாஸ் காட்சித் தலத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சியுடன் மேலும் அதிகமான உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வருகை தந்துள்ளனர். யில்தெசியும் அவருடைய குடும்பத்தினரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்துகின்றனர்.

1  2