• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-10 12:47:59    
சுற்றுலா துறையினால் சிங்ஜியாங் மக்களுக்குக் கிடைத்த புதிய வாழ்க்கை

cri

சில ஆண்டுகளுக்கு முன், அவர்கள் தங்களது வீடுகளைப் பயணிகளை வரவேற்கும் இருப்பிடமாக மாற்றினர். முதியவர் யில்தெசி, சூழ் என்னும் குழலை ஊதுவதைப் பயணிகள் கேட்க விரும்புகின்றனர். அவர்களுடைய குடும்பத்தினரைப் பொறுத்தவரை, பயணிகளை ஈர்க்கும் முக்கிய சுற்றுலா நிகழ்ச்சி இது தான். முதியவர் யில்தெசியின் மகள் மெய்ஹுவா எமது செய்தியாளரிடம் பேசுகையில், தமது மூத்த தலைமுறையினர்கள் கால்நடை வளர்ப்பிலும் வேட்டையாடுதலிலும் ஈடுபட்டு வாழ்க்கை நடத்திவந்தனர். ஆனால் தற்போது இந்த வாழ்க்கை முறை, சுற்றுலா துறையினால் மாறியுள்ளது என்றார். அவர் கூறியதாவது, நாங்கள் தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்துவருகின்றோம். கடந்த காலத்தில் எங்களுடைய குடும்ப வருமானம், முக்கியமாக என் தகப்பனார் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டதன் மூலம் கிடைத்தது. 1990ஆம் ஆண்டுகளில், சுற்றுலா துறையின் வளர்ச்சியினால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பயணிகளை வரவேற்கத் துவங்கினோம்.

 

என் தகப்பனார் சூல் என்னும் ஊது குழலை ஊதுவதைக் கேட்க இப்பயணிகள், எங்கள் வீட்டுக்கு வருகை தருகின்றனர் என்றார் அவர். தமது குடும்பத்தினர்கள் சுற்றுலா துறையில் ஈடுபடத் துவங்கிய பின்னர், குடும்பத்தினர் அனைவரின் ஓய்வு நேர அட்டவணை மாறிவிட்டது. சில சமயம் இரவு வரை பணி செய்ய வேண்டியுள்ளது. பயணிகள் அதிகமாக வருகை தரும் காலத்தில் தமது குடும்பத்தின் திங்கள் வருமானம், 20 ஆயிரம் யுவானைத் தாண்டியது என்றார் மெய்ஹுவா. அவருடைய வீட்டில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி, தொலைபேசிக் கருவி, குளிர்பதனப் பெட்டி உள்ளிட்ட நவீன வீட்டுப் பயன்பாட்டுச் சாதனங்கள் ஒவ்வொன்றாக வாங்கப்பட்டன. இவ்வாண்டு, கார் ஒன்றை வாங்க அவருடைய குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். வாழ்க்கை தரம் உயர உயர, முதியவர் யில்தெசிக்குப் புதிய யோசனை ஏற்பட்டுள்ளது. அவர் எமது செய்தியாளரிடம் கூறியதாவது, எனது 2வது மகன் சூல் என்னும் ஊது குழலை ஊத என்னிடமிருந்து கற்றுக்கொள்கின்றான். இதுவரை அவன் ஏற்கெனவே மூன்று, நான்கு ஆண்டு காலம் பயிற்சி எடுத்திருக்கிறான். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் படிப்பை முடித்துக்கொள்வான். அடுத்த ஆண்டு முதல் அவன் என்னுடன் ஊது குழலை ஊத முடியும் என்றார்.


1  2