• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-17 17:13:10    
சுற்றுலா துறையும் சிங்ஜியாங் மக்களின் புதிய வாழ்க்கையும்

cri

கானாஸ் ஏரியின் சுற்று வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போல, சிங்ஜியாங்கில் பல காட்சித் தலங்களிலும் சுற்றுலா துறையின் வளர்ச்சியினால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. திராட்சை அதிக அளவில் விளையும் துருவன் என்னும் இடத்தில் வசிக்கும் முதியவர் அபுலிசி அவர்களில் ஒருவர். எமது செய்தியாளர் முதியவர் அபிலிசைப் பேட்டி காண அவருடைய வீட்டுக்குச் சென்ற போது, அவர் பயணிகளை வரவேற்றுக்கொண்டிருந்தார். அவர் தமது சொந்த விளை நிலத்திலிருந்து பறிக்ககப்பட்ட பழங்களையும் உலர்ந்த பழங்களையும் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகளையும் விருந்தினர்களுக்குப் பரிமாறிக்கொண்டே எமது செய்தியாளருக்குப் பேட்டியும் அளித்தார். சுற்றுலா துறையில் ஈடுபடுவதற்கு முன் தமது குடும்பத்தின் வருமானம் முக்கியமாக, திராட்சைப் பயிரிடுவதன் மூலம் கிடைத்தது. ஆண்டுக்கு வருமானம், பல ஆயிரம் யுவான் மட்டுமே இருந்தது. ஆனால், பத்தாண்டுகளுக்கு முன், தங்களது குடும்பத்தினர் சுற்றுலா துறையில் ஈடுபடத் துவங்கிய பின்னர், வாழ்க்கை நாளுக்கு நாள் மேம்பட்டுவருகின்றது. அவர் கூறியதாவது, ஆண்டுதோறும் மொத்தம் ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் எங்கள் வீட்டுக்கு வருகை தருகின்றனர். இவ்வாண்டு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.

இதுவரை, மொத்தம் 1200 பயணிகள் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். இதன் மூலம் எங்களுக்குக் கிடைக்கும் வருமானம் 12000 யுவானைத் தாண்டியுள்ளது என்றார். பயணிகளுக்குப் பரிமாறுவதற்கான அனைத்து பழங்களும் உலர்ந்த பழங்களும் இலவசம். ஆனால், பயணிகள் இப்பழங்களை விரும்பி வாங்குவது வழக்கம் என்றார் அபுலிசி. ஆண்டுதோறும் திராட்சை மட்டும் விற்பதன் மூலம் தங்களது குடும்பத்துக்குக் கிடைக்கும் வருமானம் 15000 யுவானை எட்டலாம். வேறு வகை பழங்களையும் உலர்ந்த பழ வகைகளையும் விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்குக் கிடைக்கும் வருமானம் 30 ஆயிரம் யுவானைத் தாண்டியுள்ளது என்றார் முதியவர் அபுலிசி. கடந்த ஆண்டு சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் சுற்றுலா மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உள் நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சத்தை விஞ்சியது. சுற்றுலா துறை மூலம் சிங்ஜியாங்கிற்குக் கிடைக்கும் வருமானம் அதன் மொத்த உற்பத்தியில் வகிக்கும் விகிதம் 5 விழுக்காடாகும்.

1  2