• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-17 17:13:10    
சுற்றுலா துறையும் சிங்ஜியாங் மக்களின் புதிய வாழ்க்கையும்

cri

சிங்ஜியாங் பொது மக்களின் பணப்பையில் சேர்ந்துள்ள 100 யுவானில் 8 யுவான் சுற்றுலா துறையில் ஈடுபட்டதால் கிடைத்தது என்று தெரிய வருகின்றது. சுற்றுலா துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, கடந்த 5 ஆண்டுகளில், சிங்ஜியாங்கில் 400 கோடிக்கும் அதிகமான ரென்மின்பி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மலை மற்றும் ஏரியைப் பார்வையிடும் சுற்றுலா, பாலை வனக் காட்சி ஆராய்ச்சிச் சுற்றுலா, புல்வெளியின் மேய்ச்சல் தளத்தில் சுற்றுலா, வரலாற்றுப் பண்பாட்டு மரவுச்சின்னச் சுற்றுலா, தேசிய இனங்களின் சிறப்பு பண்பாட்டை உணரும் சுற்றுலா ஆகிய 5 காட்சித் தலங்களை உருவாக்குவதற்கு இப்பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தவிர, சிங்ஜியாங் சுற்றுலாவுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் காட்சித் தலங்களிலுள்ள விமான நிலையத்தின் கட்டுமானத்துக்காக, மத்திய அரசும் சிங்ஜியாங் உள்ளூர் அரசும் சுமார் ஆயிரம் கோடி யுவானை முதலீடு செய்துள்ளது. ஏராளமான பயணிகள் காட்சித் தலங்களில் பயணம் மேற்கொண்டிருப்பதால், இவ்விடங்களிலுள்ள உயிரின வாழ்க்கைச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்காட்சி தலங்களில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், இவ்விடங்களில் இயற்கை காட்சிக்குப் பொருந்தாத ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. இந்நிலைமையை மாற்றுவதற்காக, இவ்வாண்டு அக்டோபர் திங்கள் முதல் காட்சித் தலங்களுக்குள்ளே இருக்கும் பெரும்பாலான ஹோட்டல்களையும் உணவகங்களையும் படிப்படியாக அகற்றவும், தூவா பழங்குடி இன மக்கள் மற்றும் இதர பழங்குடி இன மக்களின் வீடுகளை மட்டுமே வைத்திருக்கவும் கானாஸ் காட்சித் தலத்தின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பயணிகளின் குடியிருப்புக்கள், கானாஸ் ஏரியிலிருந்து 30 கிலோமீட்டர் அப்பாலுள்ள சியாதன்யு என்னும் இடத்தில் அமைந்துள்ளன. அங்குள்ள வரிசை வரிசையான வீடுகள் ஐரோப்பிய பாணியில் கட்டப்படுவதை எமது செய்தியாளர் நேரடியாகக் கண்டார். இந்த வரவேற்புத் தளத்தின் கட்டுமானப் பணி நிறைவடைந்த பின்னர், கானாஸ் காட்சித் தலத்திலுள்ள பயணிகளின் குடியிருப்பாக அது விளங்கும் என்று கானாஸ் காட்சித் தலத்தின் பணியாளர் சாங்ஹொங் அம்மையார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, கானாஸ் காட்சித் தலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, பயணிகளின் குடியிருப்புக்களையும் காட்சித் தலத்தையும் இரண்டு பகுதிகளாகப் பிரிப்போம். காட்சித் தலத்திலுள்ள தற்போதைய வாழ்க்கை வசதிகளை 30 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கி, அதாவது சியாதன்யுக்கு மாற்றுகிறோம். எதிர்காலத்தில் கானாஸுக்கு வருகை தரும் பயணிகள் காட்சித் தலத்தில் வசிக்க மாட்டார்கள். அதாவது, அவர்கள் சியாதன்யு என்னும் இடத்தில் வசிப்பார்கள். இவ்வாறு செய்வதால், கானாஸிலுள்ள உயிரின வாழ்க்கைச் சூழலை நன்கு பாதுகாக்கப்பட முடியும் என்றார். சியாதன்யு என்னும் இடத்திலுள்ள சுற்றுலா வசதிகளின் கட்டுமானப் பணி முடிவடைந்த பின்னர், நாள் ஒன்றுக்கு 5000 பயணிகள் இவ்விடத்தில் தங்கியிருக்கலாம். கானாஸ் காட்சித் தலத்துக்கு வருகை தரும் பயணிகளின் தேவை நிறைவு செய்யப்படும்.


1  2