• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-09 17:12:51    
சுங்சின் நகரில் சாலை ஓரங்களில் ஹோ கோ உணவு

cri

சுங் சின் ஹோ கோ மிகவும் ருசியானது. சூப்பில் மிளகாயும், சீன மிளகும், சூபில் அதிகமாக இருப்பதால், காரசாரமாக இருக்கின்றது. இதன் மணம் வெகு தூரத்துக்கு வீசி, மக்களின் உண்ணும் ஆர்வத்தை தூண்டுகின்றது. வடகிழக்கு சீனாவிலிருந்து சுங்சின் நகருக்கு சுற்றுப்பயணமாக வந்த சான் தா சி கூறியதாவது,

1982ஆம் ஆண்டு நான் முதன்முதலாக சுங்சின் நகருக்கு வந்திருந்தேன். அந்த நாளில் பனி பெய்தது. ஹோட்டலில் வந்து சேர்ந்த போது இரவு 8 மணி. ஹோட்டல் வெளியே, ஒரு ஹோ கோ உணவு விடுதி இருக்கின்றது. ஹோ கோவின் மணம் எனக்கு பெரிதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அப்போது முதல், ஒவ்வொரு முறை சுங்சின் வரும்போதும், அந்த விடுதிக்குச் செல்வது வழக்கமாகிவிட்டது. ஹோ கோவைத் தவிர உலகில் வேறு உணவுகள் என்னை ஈர்க்க முடியாது என்ற உணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

சான் தா சி போன்று பயணிகள் சுங்சின்கிற்கு வந்தால், கண்டிப்பாக ஹோ கோவை ருசிக்கின்றனர். இது சுங்சின் பயணத்தின் முக்கிய பகுதியாகிவிட்டது. ஹோகோ என்னும் உணவிலிருந்து பயணிகள் விருந்தோம்பல், நேர்மை ஆகியவை படைத்த சுங்சின் மக்களின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.

சில நூறு ஆண்டுகள் வளர்ச்சிக்குப் பின், பாரம்பரியத்தை நிலைநிறுத்தி, தனிச்சிறப்பை அதிகரிக்கும் அடிப்படையில் சுங் சின்னின் ஹோ கோ பல்வகையாக பெருகிவிட்டது. பல்வேறு நிலை நுகர்வோரின் தேவையை நிறைவேற்ற முடிகின்றது. முன்பு மீனவர்கள் கண்டுப்பிடித்த வடிவம் இன்னும் நிலவுகின்றது. இது இன்னும் சுங்சின் மக்கள் முதல் விருப்பமாக இருக்கின்றது. சுவை, மலிவு, எளிமை ஆகியவை இதன் தனிச்சிறப்பாகும். 2வது தலைமுறை ஹோ கோ உணவை விருப்பம் போலி தட்டி யெடுத்துவைத்து சாபிடலாம். பண்பாடு மற்றும் விடுதியின் சூழ்நிலையில் கவனம் செலுத்துகின்றது. மூன்றாவது தலைமுறை ஹோ கோவுக்கு தேவைப்படும் உணவு வகைகளில் மாசுபடாத பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே இதன் நோக்கம்.


1  2