• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-24 12:00:37    
பெய்ச்சிங் வன மிருகக் காட்சிசாலை

cri

இப்பொழுது நீங்கள் கேட்டது, crackle என்னும் பறவை எழுப்பிய ஓசையாகும். வணக்கம். செல்வமடைய வாழ்த்து என்பது அதன் பொருள். இன்றைய நிகழ்ச்சியில் இந்தப் பறவையின் வீடான பெச்சிங்கிலுள்ள வன மிருகக் காட்சிசாலைக்கு உங்களை அழைத்துச்செல்கிறோம். பெய்ச்சிங் நகர் பிரதேசத்திலிருந்து புறப்பட்டு, கார் மூலம் சென்றால் சுமார் ஒரு மணிநேரத்தில், நான் பெய்ச்சிங் வன மிருகக் காட்சிசாலை சென்றடைந்தேன். இந்த வன மிருகக் காட்சிசாலையில் நுழைந்ததும், செழித்துவளரும் காடு நம் கண் முன்னால் காட்சியளிக்கின்றது. இதன் 95 விழுக்காட்டு நிலப்பரப்பை காடு ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது என்று இந்த வன மிருகக் காட்சிசாலையின் துணை பொது மேலாளர் லீவெய்காங் கூறினார்.இந்த வன மிருகக் காட்சிசாலையின் மொத்த நிலப்பரப்பு 240 ஹெக்டர் ஆகும்.

மிருகங்கள் சுதந்திரமாகத் திரியும் பகுதி, மிருகங்களை நடந்த வண்ணம் பார்வையிடும் பகுதி, மிருகங்கள் நிகழ்ச்சியை அரங்கேற்றும் பகுதி, குழந்தைகளுக்காக மிருகப் பகுதியும் விளையாட்டுப் பகுதியும் ஆகிய நான்கு பகுதிகளாக இந்த மிருகக் காட்சிச்சாலை பிரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மிருகங்களை நடந்த வண்ணம் பார்வையிடும் பகுதியில், பொன் நிற ரோம குரங்கின் வீட்டைக் காணலாம். இந்தக் குரங்குகள், பந்து வடிவத்தில் கட்டப்பட்ட இரண்டு கண்ணாடி கட்டதங்களில் வாழ்கிறேன். பயணிகள் கண்ணாடியால் ஆன, நீளமான ஊடுவழி மூலம், பொன் நிறமான, ஈர்ப்பு தன்மை வாய்ந்த, பயில் திறமிக்க இந்த குரங்குகளைப் பார்வையிடலாம். இந்தப் பகுதியின் வெப்ப மண்டலக் காட்டுப் பிரதேசத்தில் நுழைந்த போது, முற்றிலும் வேறுபாடான ஒரு காட்சி தோன்றியது. அகலமான தெளிவுமிக்க கண்ணாடி அறையில், வெப்ப மண்டல தாவரங்கள் செழித்து வளர்கின்றன. வெப்ப மண்டல மிருகங்கள் சுதந்திரமாகத் திரிகின்றன. மெலிந்தும் உயரமாகவும் இருக்கும் greaper flamingo எனும் பறவை, நீரோரத்தில் நடந்திருந்தன. கிளியும் great pied hornbiu என்னும் பறவையும் தடிப்பான இலையின் மேல் குரலில் உரையாடின.

1  2