• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-11 19:01:18    
திபெத் இன மொழி இயல் அறிஞர் புஜன்சிலெங்

cri

அழகான திபெத்

கடந்த மார்ச்சு திங்களில், ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறு பேர், லாசாவிலுள்ள திபெத் பல்கலைக்கழகத்திற்கு வந்து, புஜன்சிலெங் எனும் 38 வயது இளைஞரைத் தமது ஆசிரியராக கொண்டு, இரண்டு ஆண்டுகாலம் திபெத் இன மொழியைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினர். திபெத்தில் புஜன்சிலெங் ஆசிரியருடன் நீண்டகாலமாக தங்கி திபெத் இன மொழியை ஆராய்ந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு, அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் எளிதில் கிடைக்காது என்று அவர்களுக்குத் தெரியும். ஏனெனில், புஜன்சிலேங் தமது ஆசிரியராகக் கொள்ளுவோர் அனைவருமே, திபெத் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் மே திங்கள் முதல் ஜூலை திங்கள் வரையான இரண்டு திங்கள் கால சர்வதேச திபெத் இன மொழிக்கான கோடைகால உயர் நிலை வகுப்பில் மட்டுமே சேர முடியும்.

திபெத்தின் ழக்காச்சே பிரதேசத்தில் பிறந்த புஜன்சிலேங், விரிவான அறிவுடைய திபெத் இன அறிஞர். இப்போது, திபெத் பல்கலைக்கழகத்தில் திபெத் மொழித் துறையில் ஆசிரியராகப் பணி புரிகின்றார். 13 ஆண்டுகளுக்கு முன்பு பெய்சிங் மத்திய தேசிய இன பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாகி, திபெத் இன மொழி இலக்கிய இளங்கலை பட்டம் பெற்றார். 7 ஆண்டுகளுக்கு முன், திபெத் வழி புத்த மத வரலாற்றை ஆராயும் வகையில், அவர், நார்வேயின் ஆஸ்லொ பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

அழகான திபெத்

2001ம் ஆண்டு ஜுன் திங்களில் நார்வேயில் படிப்பை முடித்துக்கொண்டு அவர் நாடு திரும்பினார். அப்போது முதல், ஆண்டுதோறும் உள்நாட்டிலுள்ள திபெத் இன மற்றும் ஹான் இன மாணவர்கள் அவரிடமிருந்து திபெத் முறை புத்த மத வரலாற்றைக் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். தவிரவும், வெளிநாட்டு மாணவர்களும் தாங்களாகவே வருகை தந்து, அவரிடம் படிக்க விரும்புகின்றனர்.

பின்லாந்து நாட்டவரான கதலினா டூர்பெநியன், இவ்வாண்டு புஜன் சேர்த்துக்கொண்ட 21 அந்நிய மாணவர்களில் ஒருவராவார். 30 வயதான அவர், இப்போது, அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் திபெத் இன இயலில் முனைவர் பட்டத்துக்கான மாணவர். அமெரிக்கா செல்வதற்கு முன், பின்லாந்தின் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் ஒன்றரை ஆண்டுகாலம் திபெத் இன மொழியைக் கற்றுக்கொண்டார். ஒரு திபெத் இன இயலாளராக ஆவது என்ற லட்சியத்தை நனவாக்க வேண்டுமாயின், திபெத்திற்கு வரத் தான் வேண்டும் என்றும், திபெத்தில் தான், திபெத் இன இயலை ஆராய்வதற்கு ஈடிணையற்ற மொழிச் சூழலும், சமூகச் சூழலும் உள்ளன என்றும் அவர் கருதுகின்றார். அவர் கூறியதாவது:

"திபெத் இன மொழி பேசப்படுவதைக் கேட்டு, வாய் மொழித் தரத்தை உயர்த்துவதே, திபெத்திற்கு வந்து படிப்பதன் முக்கிய நோக்கமாகும் என்றார். திபெத் இன பண்பாட்டிலும் திபெத் வழி புத்தமதத்திலும் எனக்கு அதிக அக்கறை. ஒரு திபெத் இன இயலாளராக இருக்க நான் பாடுபட்டு வருகின்றேன்" என்றும் அவர் கூறினார்.

1  2  3