• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-11 19:01:18    
திபெத் இன மொழி இயல் அறிஞர் புஜன்சிலெங்

cri

புஜன் ஆசிரியர் மீது தாம் வியப்பும் நன்றியும் நிறைய கொண்டுள்ளேன். ஆசிரியரிடமிருந்து தொழில் முறை அறிவைக் கற்றுத் தேர்ந்ததாகவும், ஆசிரியரின் சளையாத பணி எழுச்சியாலும் தொழில் நடையினாலும் பெரிதும் மனமுருகியதாகவும் கதரினா கூறினார். அவர் கூறியதாவது:

"ஆசிரியர் மிகவும் அன்பாகவும் பொறுமையுடனும் பாடம் நடத்துகின்றார். பாடம் கேட்டுப் புரிந்ததா என, இடைவிடாமல் கேட்டுக்கொள்கின்றார். புரியவில்லை என்று பதிலளித்ததும், ஆசிரியர் பாடம் நிறுத்தி, மிகவும் பொறுமையுடன் திரும்பவும் திரும்பவும் எங்களுக்கு விளக்கிக்கூறினார். எவ்வளவு சிறந்த ஆசிரியர், எனக்கு வியப்பாக உள்ளது" என்றார், அவர்.

42 வயதான சுலேன் ராசுவிச்சும், புஜனின் மாணவர். எட்டு ஆண்டுகளுக்கு முன் அவர் அமெரிக்காவில் திபெத் இன மொழியைக் கற்றுக் கொள்ளத் துவங்கினார். தம்மால் முன்பு வாய்மொழி பேச முடியவில்லை. எனவே, திபெத்தில் திபெத் இன மொழியைக் கற்றுக்கொள்ளும் இவ்வாய்ப்பை தாம் மிகவும் பேணிமதித்து, இங்குள்ள தனித்தன்மை வாய்ந்த மொழிச்சூழலை பயன்படுத்தி வாய்மொழியை நன்கு கற்றுத் தேர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

"திபெத்தில், திபெத் இன மொழியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். வானொலி நிகழ்ச்சிகளை கேட்கலாம். திபெத் இன மொழியிலான தொலைக் காட்சி தொடர் நாடகங்களை கண்டுகளிக்கலாம். திபெத் இன மொழி பத்திரிகைகளையும் இதழ்களையும் படிக்கலாம். தவிரவும், பண்டைக்கால திபெத் இன மொழி மற்றும் இக்கால திபெத் இன மொழியின் இலக்கியத்தையும் கற்றுக்கொள்ள முடியும்" என்றார், அவர்.

திபெத் பல்கலைக்கழக சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பு அலுவலகத்தின் கிசான்தோஜி பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக, திபெத் பல்கலைக்கழகம் சேர்த்துக்கொள்ளும் அந்நிய மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டில் மட்டும் 90 மாணவர்கள் இங்கு படிக்கத் துவங்கினர் என்றார்.


1  2  3