• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-11 19:01:18    
திபெத் இன மொழி இயல் அறிஞர் புஜன்சிலெங்

cri

கதரினா, திபெத் பல்கலைக்கழகத்தில் திபெத் இன மொழி உயர் நிலை வகுப்பில் பயில்கின்றார். பண்டைக்கால திபெத் இன மொழி படைப்புகளைப் படிக்கும் சிறந்த அடிப்படை அவருக்கு உண்டு. வாய்மொழி திறமை, பற்றாக்குறை மொழிதரம் வேறுபட்ட இந்த அந்நிய மாணவர்கள் திபெத் இன மொழியக் கேட்கும் திறமையை உயர்த்துவதில் புஜன் பெரும் கவனம் செலுத்துகின்றார். வகுப்பில், அவர் திபெத் இன மொழியில் சொல்லிக்கொடுக்கின்றார். இம்மாணவர்கள் வகுப்பில் ஆங்கிலத்தில் பேசாமல், திபெத் இன மொழியில் மட்டுமே பேச வேண்டும் என்று அவர் கோருகின்றார். தவிரவும், திரைப்படம் மூலமும் பாடம் நடத்தி, திபெத் இன மொழி திரைப்படங்களைக் கண்டுகளிப்பதன் மூலம், மாணவர்களின் கேட்கும் சக்தியை உயர்த்த பாடுபடுகின்றார். கதரினா போன்ற, குறுகிய கால மேற்படிப்பு மாணவர்கள் திபெத் இன மொழியின் வாய்மொழியை பயிலுவதற்கு சிறந்த மொழிச் சூழலை உருவாக்க புஜன் முயற்சிக்கின்றார்.

படிக்காத நேரத்தில், தாம் திபெத் இன மொழியில் உள்ளூர் திபெத் இன மக்களுடன் உரையாடுவதாக கதரினா கூறினார். திபெத் பல்கலைக்கழகத்தில் தமது திபெத் இன வாய்மொழி தரம், அமெரிக்காவில் படிக்கும் போது பெரும் முன்னேறமடைந்துள்ளது என்றார், அவர்.

பல்கலைக்கழகத்தின் இதர ஆசிரியர்களை போலவே, புஜனும், நாள்தோறும் வழக்கம் போல பணி புரிகின்றார். திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொரு காலையிலும் அவர் நான்கு மணி நேரம் பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும். மாணவர்கள், திபெத் இன மொழியில் கேட்கும் திறமையையும் பேசும் திறமையையும் உயர்த்துவதோடு, அவர்களுக்காக திபெத் இன வரலாறு, இலக்கியம் ஆகியவற்றையும் திறந்து வைத்துள்ளார். அன்றி, "மிராரேபா சரிதையும் பாடலும்" என்ற பண்டைக்கால நீள் புதினத்தை பாடமாக பயன்படுத்தினார். அவர் கூறியதாவது:

"இந்த பண்டைக்கால படைப்பை, பாட நூலாகப் பயன்படுத்துவதன் எனது நோக்கம், மாணவர்கள், பண்டைக்கால திபெத் இன மொழியைப் படித்து பகுத்தாராயும் அவர்களின் திறமையைப் பயிற்றுவிப்பதோடு, பண்டைக்கால திபெத் இன மொழியின் சொற்களை அதிகமாக கிரகித்துக் கொள்ள உதவுவதாகும்" என்றார், அவர்.

1  2  3