• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-21 14:43:02    
திபெத்தின் தொழில் கல்வி துறை

cri

சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் தொழில் கல்வி வளர்ச்சி பற்றி சில நேயர்கள் கேள்வி கேட்டனர். அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்கின்றோம்.

திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் புதுமுறைக் கல்வி தாமதமாக தொடங்கிய போதிலும் அதன் வளர்ச்சி விரைவாக இருக்கின்றது. கடந்த சில ஆண்டுகளில் துவக்க பள்ளி முதல் இடைநிலை பள்ளிப்டிப்பு வரை 9 ஆண்டு காலக் கட்டாயக் கல்வி முறை பரவலாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் வேலை வாய்ப்பு பெறும் நோக்கத்துடன் தொழில் கல்வியை திபெத் தன்னாட்சி பிரதேச அரசு ஆக்கப்பூர்வமாக வளர்த்துள்ளது. அப்படிதானே.

தொழில் கல்வி திபெத் மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது. திபெதின் சான்நான் குங்கா மாவட்டத்தின் ஜெத்தெசியு நகரில் வாழ்கின்ற 18 வயதான திபெத் இன இளம் பெண் பிக்காச்சோக்காவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டாக சொல்லலாம். வாரத்தில் திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரையான காலை எட்டரை மணிக்கு அவர் தம் ஊருக்கு அருகில் உள்ள ஜெத்தெசியூ இடுப்பு துணி தொழிற்சாலை சென்று அங்குள்ள 20க்கும் அதிகமான தொழிலாளர்களுடன் இணைந்து சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியுடனும் வேலை செய்கிறார். ஜெத்தெசியு நகரில் இடுப்புத் துணி பின்னும் உற்பத்திக்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அங்கே இது குடும்பத் தொழிலாக நடைபெறுகின்றது.

கைவினை நுட்பம் தெரிந்த முதியோர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் சொக்கா போன்ற இடை நிலை பள்ளி கல்வி பெற்ற இளைஞர்கள் மிகக் குறைவு என்று நான் கேட்டறிந்தேன். ஏன் சொக்கா போன்ற இளைஞர்கள் மக்களால் வரவேற்கப்படுகின்றனர்?

தொழிற் கல்வி மூலம் தான் பாரம்பரிய கைவினை நுட்பத்தை சொக்கா கற்றார். இது பற்றி அவர் கூறியதாவது—

இடைநிலைப் பள்ளியில் 3வது வகுப்பில் பயின்ற போது தொழில் கல்வி கற்க நான் விரும்பினேன். என் சக மாணவர்களில் 50 விழுக்காட்டினர் என்னை போல தொழிற் கல்வி பெற தீர்மானித்தனர். பள்ளியில் நான் இடுப்புத் துணி பின்னும் தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்டேன். படிப்பை முடித்துக் கொண்டதும் எனக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. தொழில் நுட்பம் இதற்கு முக்கிய காரணமாகும். இந்த வேலை எனக்கு மிகவும் பிடிக்கின்றது என்றார் அவர்.

1  2  3