
அவர்களுக்கு நன்மை தருவது மட்டுமல்ல திபெத் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் நன்மை தர முடியும் என்று நான் நம்புகின்றேன்.
உங்கள் நம்பிக்கையில் ஐயம் எதுவும் இல்லை. திபெத்தின் மற்ற மாவட்டங்களிலும் சானான் மாவட்டத்தை போல தொழிற் கல்வி விறுவிறுப்பாக நடத்தப்படுகின்றது. வட்டார தனிச்சிறப்பையும் பண்பாட்டு மேம்பாட்டையும் அந்த மாவட்டங்கள் பெரிதும் வெளிக் கொணர்ந்துள்ளன.
சியு ஸவேய் மாவட்டம் தானியம் விளையும் மாவட்டமாகும். அங்கு வேளான் இயந்திரங்களை அடிக்கடி பழுதுபார்க்க வேண்டுயுள்ளது. பல மாணவர்கள் டராக்டர் பழுதுபார்க்கும் தொழில் நுட்பத்தை இடை நிலை பள்ளியில் கற்று கொள்கின்றார்கள். பைரான் மாவட்டத்தில் 80க்கும் அதிகமான இடைநிலைப் பள்ளி மாணவர்கள் வெப்ப அறையில் தர்பூசணிப் பழம் பயிரிடும் தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொள்கின்றனர். திபெத் பாணியுடைய கணப்பு அடுப்பு உற்பத்தி செய்யும் தாஞ்சுன் மாவட்டத்தில் பல்வேறு தொழில் பள்ளிகளில் இது பற்றிய கல்வி பாடம் நடத்தப்படுகின்றது.
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் கல்வி ஆணையத்தின் தொழிற் கல்வி பகுதித் தலைவர் தென் குவாங் சினின் கருத்தை கவனிக்க வேண்டும்.
அவர் கூறியதாவது—
2004ம் ஆண்டு முதல் திபெத் கல்வி ஆணையகம் தொழிற் கல்வி வளர்ப்பதை கல்வித் திட்டத்தில் சேர்த்துள்ளது. அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. கடந்த ஆண்டில் இதற்கு 1 கோடி யுவான் ஒதுக்கி தொழிற் பயிற்சி வகுப்பு நடத்தியுள்ளது. இவ்வாண்டில் இதற்கான முதலீடு 1 கோடியே 50 லட்சம் யுவானை தாண்டியது. திபெத்தின் இடை நிலைத் தொழிற் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் 2005ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை. பள்ளி சூழலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசும் உள்ளூர் அரசும் 24 கோடி யுவானை சிறப்பு நிதித் தொகையாக ஒதுக்கி ஆண்டுக்கு 25 ஆயிரம் மாணவர்களை சேர்க்கும். 1 2 3
|