• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-22 21:35:55    
தாய்-சேய் நலவாழ்வு

cri

ரைஜா.....சரிதான். 25 வயது திபெத் இளம் பெண் ஸரன்சோமாவின் மகிழ்ச்சியான வாழ்க்கையை நான் விவரிக்கின்றேன். கடந்த ஆகஸ்ட் திங்கள் 2ம் நாள் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாகும்.

கலை......ஏன்? எதனால் ஆக்ஸ்ட் திங்கள் 2ம் நாள் அவருக்கு மகிழ்ச்சிகரமான நாள்? அவருக்கு முதல் குழந்தை பிறந்ததா?

ராஜா....நீங்கள் சொன்னது சரியானது. அன்று அவர் தாயாக மாறினார். சோமாவின் குடும்பம் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் லின்சு மாவட்டத்தின் புசியூ வட்டத்தில் வசிக்கின்றது. லின்சு மாவட்டம் மகளிர் மற்றும் குழந்தை நலவாழ்வு பாதுகாப்பு மருத்துவ மனையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 40 கிலோமீட்டர் தொலைவு என்பது மனித நடமாட்டம் குறைவான திபெத் மக்களை பொறுத்தவரை அவ்வளவு பெரிய தொலைவு இல்லை. அவருடைய நிலைமையை பார்க்கலாம்.

கலை..........கருவுற்ற நாட்களில் நான் லின்சு வட்டாரத்தின் மகளிர் மற்றும் குழந்தை நலவாழ்வு பாதுகாப்பு மருத்துவ மனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்தேன் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தது. அப்போது முதல் நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். குணமடைந்த பின் மகளை பெற்றெடுத்தேன். சிகிச்சைக்கு செல்ல வேண்டிய கட்டணம் அவ்வளவு அதிகமில்லை. எங்களால் தாங்கிக் கொள்ள முடியும் என்றார்.

ராஜா.... குழந்தை பிறந்ததும் எத்தனை மணி நேரத்துக்குள் நோய் தடுப்பு ஊசி போட வேண்டும்?

கலை....சீனாவில் குழந்தை பிறந்த 24 மணி நேரத்துக்குள் முத்தடுப்பு ஊசி மற்றும் பிசிக்கி ஊசி போட வேண்டும். தவிர, குழந்தைக்கு ஊசி போடும் பதிவு அட்டை ஒன்றை டாக்டர் அவருக்கு வழங்கினார். இந்த அட்டையை வட்டார மருத்துவ நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். ஊசி போட வேண்டிய தருணத்தில் வட்டார மருத்துவ நிலையத்தின் டாகடர்கள் அவருக்கு தகவல் தெரிவித்த பின் அவர் குழந்தையைக் கொண்டு சென்று ஊசி போட வேண்டும்.

1  2  3