• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-22 21:35:55    
தாய்-சேய் நலவாழ்வு

cri

ராஜா...சோமா எத்தனை நாட்கள் மருத்துவ மனையில் தங்கியிருந்தார்?மத விதிகளின் படி அவர்கள் குழந்தைக்கு கோயிலில் பெயர் சூட்ட வேண்டுமா?

கலை.... குழந்தை பெற்ற பின். சோமாவின் உடம்பு சிறந்த நிலையில் இருந்தது. ஆகவே மருத்துவ மனையில் சில நாட்கள் தங்கியிருந்து ஊருக்கு திரும்ப முடிந்தது. திபெத் மக்கள் பின்பற்றும் புத்த மதத்தின் விதியின் படி சோமா கோய்லுக்கு குழந்தையைக் கொண்டு செந்று புத்தரிடம் பெயர் சூட்ட வேண்டிக் கொள்கிறார். சோமா போல லின்சு மகளிர் மற்றும் குழந்தை நலவாழ்வு பாதுகாப்பு மருத்துவமனையில் வேளாண் மற்றும் மேய்ச்சல் பகுதிகளிலிருந்து வந்த 7 8 பெண்கள் குழந்தை பெற தங்கியிருக்கிறார்கள்.

ராஜா....சீனாவில் பொதுவாக பெண்கள் மருத்துவ மனையில் தான் குழந்தை பெறுகிறார்களா?

கலை.....சீனாவில் பெண்கள் பெரும்பாலோர் மருத்துவ மனையில் குழந்தை பெறுகின்றனர். திபெதில் இப்போது இந்த நல்ல வழக்கம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. லிங்சு மகளிர் மற்றும் குழந்தை நலவாழ்வுப் பாதுகாப்பு மருத்துவமனை தலைவர் சோய்யுன் இது பற்றி கூறுகின்றார்

நலவாழ்வுப் பாதுகாப்புத் துறையில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்கள் அனைத்து வேளான் மற்றும் மேயச்சல் பிரதேசங்களுக்குச் சென்று பாதுகாப்பாக குழந்தை பெற்று வளர்ப்பதென்ற மத்திய அரசின் கொள்கையை பிரச்சாரம் செய்துள்ளனர். அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நல வாழ்வு பாதுகாப்பு சேவையும் குடும்ப நலத் திட்டம், உடம்பு தூய்மை போன்ற சேவைகளையும் வழங்கியுள்ளனர். வேளாண் மற்றும் ஆயர்குலப் பெண்கள் மருத்துவ மனையில் குழந்தை பெற்றால் அவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். தவிர குழந்தைக்கு உடை, துணி போன்ற அன்றாட தேவைப்பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தலைவர் சோய்யுன் கூறினார்.


1  2  3