• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-02 16:17:42    
சீன சிங்ஜியாங்கில் பண்டைய ஹௌதியென் நகரம்

cri

வட மேற்கு சீனாவின் சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் பழம் பெருமை வாய்ந்த ஹௌதியென் நகரம் உள்ளது. பண்டை காலப் "பட்டுப் பாதை"யில் முக்கிய நகராக அது திகழ்ந்தது. இங்குள்ள ஆபரணக்கற்கள் உலகப் புகழ்பெற்றவை. ஹௌதியென் நகரம், பண்டை காலத்தில் யியுதியென் என்று அழைக்கப்பட்டது. தற்போது இந்நகர மக்களில் பெரும்பாலோர், இஸ்லாமிய மத நம்பிக்கையுடைய உய்கூர் இனத்தவர். ஆனால், இந்நகரம், சீனாவின் முதலாவது புத்த மத மையமாகும். யியுதியென் நகரம், பண்டைக் காலத்தில் கீழை நாடுகளையும் மேலை நாடுகளையும் இணைக்கும் "பட்டுப் பாதை"யில் முக்கிய நகரமாக இருந்தது மட்டுமல்ல, புத்த மதம் இந்தியாவிலிருந்து சீனாவுக்குள் பரவிய முதல் இடமாகவும் திகழ்ந்தது. ஏறக்குறைய கி.மு. முதலாவது நூற்றாண்டில் புத்த மதம் இந்தியாவிலிருந்து இந்நகருக்குள் பரவி, வளர்ச்சியடைந்ததால் இந்நகர மக்கள் அனைவரும் புத்த மதத்தில் நம்பிக்கொண்டவர்களாக இருந்தனர். அத்துடன், பிரபல புத்த மதத் தலைவர்கள் பலர் மதப் போதனை செய்யும் இடமாகவும் யியுதியென் நகரம் திகழ்ந்தது. தற்போதும், ஏராளமான புத்த மதக் கோயில்களின் சிதிலங்களைக் காணலாம். ஹௌதியென் நகரின் நீண்ட வரலாற்றுச் சின்னமாக விளங்கும் இம்மரபுச்சிதிலங்கள் பற்றிக் குறிப்பிடும் போது ஹௌதியென் மக்கள் பெருமைப்படுவது இயல்பே. ஹௌதியென் நகரில் பல்லாண்டுகளாக வாழ்ந்துவரும் துவன்லி அம்மையார், ஹௌதியென் நகருக்கு அருகிலுள்ள பழம் பெரும் நியா நகரம் பற்றி கூறியதாவது, இந்நகரம் பற்றி, சுமார் 2200ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கிருந்த உய்கூர் இனத்தவர் இதை நியா என்று அழைத்தனர். கடந்த 30ஆம் நூற்றாண்டில், ஸ்டெயின் என்ற பிரிட்டிஷ் ஆய்வாளர் தாக்லாமாகன் பாலை வனத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட போது பண்டைய நியா நகரைக் கண்டுபிடித்தார்.

அப்போதைய நியா நகரம் நன்கு பாதுகாக்கப்பட்டது. சில புத்த மதக் கோபுரங்களும் செவ்வனே பாதுக்காக்கப்பட்டன என்றார். இந்தப் பண்டைய நியா நகரின் மரபுச் சிதிலத்தின் நீளம் தெற்கிலிருந்து வடக்காக சுமார் 30 கிலோமீட்டர். அதன் அகலம், கிழக்கிலிருந்து வடக்கிற்காக சுமார் 5 கிலோமீட்டர். புத்த மதக் கோபுரங்கள், கோயில்கள், கல்லறைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட அதிகமான மரபுச் சிதிலங்கள் உள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் வாழ்க்கை விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால், இந்தப் புராதன நகரம், எல்லையில்லாத தாக்லாமாகன் பாலை வனத்தில் புதைந்துவிட்டது. 1901ஆம் ஆண்டில் ஸ்தெயின் என்பவர் இவ்விடத்திலிருந்து விலை மதிப்பற்ற பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றதால், உலகம் அதிர்ச்சியடைந்தது. ஹௌதியென் நகரில், நியா போன்ற பழம் பெரும் நகரைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். இந்த வரலாற்றுக் கதை, பாலைவனத்தில் புதைந்துபோன மரபுச் சிதிலங்கள் பற்றி வரலாற்று ஓவியங்கள் போல மக்களுக்கு நினைவூட்டுகின்றன.

1  2