• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-02 16:17:42    
சீன சிங்ஜியாங்கில் பண்டைய ஹௌதியென் நகரம்

cri

பண்டைக் காலத்தில் யியுதியென் நகரம், "பட்டுப் பாதை"யின் தென் பகுதியில் முக்கிய போக்குவரத்து மையமாகவும் பட்டுத்துணிகள் ஒன்றாகச் சேமித்துவைக்கப்பட்ட முக்கிய இடமாகவும் திகழ்ந்தது. கடல் வர்த்தகம் துவங்கி வளர்ச்சியடைந்ததால், 15வது நூற்றாண்டில் தரை வழி பட்டுப் பாதை படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. யியுதியென் நகரிலும் அக்காலத்தின் விறுவிறுப்பான வாழ்க்கை ஓய்ந்து, சந்தடி இல்லாமல் போனது. ஆனால், தற்போது ஹௌதியென் நகரம் என்று பெயர் மாற்றப்பட்ட இந்நகரில் பிரபலமான பட்டுத் துணி நெசவுத் தொழிலைப் பயணிகள் பார்வையிட்டு அக்காலத்திலான பட்டுப் பாதையின் புகழை உணரலாம். ஒரு பட்டுத்துணி நெசவு ஆலையில், பாகிஸ்தான் பயணி நானிஹால்.ஷஹ் எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். இவ்வாலையில் தயாரிக்கப்பட்டுள்ள பட்டுத்துணிப் பொருட்களைக் கண்ட போது, தமது சிறுவயது அனுபவம் நினைக்கு வந்தது என்றார். அவர் மேலும் கூறியதாவது, பாகிஸ்தான், சிங்ஜியாங்கின் அருகில் அமைந்துள்ளது. பட்டுத்துணி அல்லது கம்பளம் வெகு காலத்திற்கு முன்பே பாகிஸ்தானில் நுழைந்துவிட்டன. அப்போது, யாராவது ஒருவரின் குடும்பத்தில் ஒரு பட்டுத்துணியோ கம்பளமோ இருந்தால் அது வியப்பூட்டும் விஷயம். இந்த நெசவு ஆலையைப் பார்வையிட்ட நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகின்றேன் என்றார்.

பாகிஸ்தான் பயணி நானிஹால்.ஷஹ் பார்வையிட்ட இவ்வாலையில், தயாரிக்கப்படும் பல்வேறு தரமான பட்டுத்துணிகளில் பல, பட்டுப் பாதை நெடுகிலும் உள்ள நாடுகளில் விற்பனையாகி, பெரிதும் வரவேற்கப்படுகின்றன. பண்டைக் காலத்தில் இந்த நகர், யியுதியென் என்று அழைக்கப்பட்டது. திபெத் மொழியில் யியுதியெ என்பது ஆபரணக்கல் உற்பத்தி இடமென பொருள்படுகின்றது. ஆபரணக்கல் உற்பத்தியிலும் இன்றைய ஹௌதியென் நகரம், பண்டைக் கால யியுதியென் நகரம் போல உலகில் புகழ் பெற்றுள்ளது. இந்நகரில் உற்பத்தியாகும் மதிப்பு மிக்க பல்வகை ஆபரணக்கற்கள் சுவீடன், இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆபரணக்கல்களைச் சேகரிக்க விரும்பும் அந்நகரவாசி வாங்குவன் எமது செய்தியாளரிடம் கூறியதாவது, ஹௌதியென் ஆபரணக்கல் சீனாவிலும் உலகிலும் புகழ்பெற்றுள்ளது. உலகில் மிகவும் தூய்மையான ஆபரணக்கல் இருக்கும் இடங்களில் ஒன்றாக ஹௌதியென் நகரம் திகழ்கின்றது. ஹௌதியென் மக்களாகிய நாங்கள், இதனால் வியப்படைகிறோம். யாராவது ஒருவரின் வீட்டில் சிறந்த ஆபரணக்கல் பொருள் ஒன்று இருந்தால் அனைவரும் பெருமைப்படுவர் என்றார். மணிக்கலும் கம்பளமும் ஹௌதியென் நகரின் சுதேசிப் பொருட்கள். பயணிகள் அவற்றை வாங்க வேண்டுமானால், ஹௌதியென் நுண் கலை நிறுவனத்திற்குச் சென்று வாங்கினால் நல்லது. இது நிச்சயம் பயணிகளுக்கு மனநிறைவு தரும்.


1  2