
சீனாவின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மலைப்பிரதேசத்தில் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் பின் தங்கிய நிலையில் உள்ளது. அங்குள்ள மக்கள், வறுமை நிலையில் வாழ்கின்றனர். ஆனால், சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி துவங்கிய பின், மலைப் பிரதேசத்தின் தோற்றத்தில் மாபெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. அங்குள்ள பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது. மக்கள் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், லுங்சன் தேசிய இனத் தன்னாட்சி மாவட்டத்திலுள்ள லுங்ச்சி அடுக்கு முறை சாகுபடி வயல்களைக் கண்டுகளிக்கத் தங்களை அழைத்துச் செல்வோம். அங்குள்ள மக்களின் வாழ்க்கையில் காணப்பட்டுள்ள மாபெரும் முன்னேற்றத்தை நேரில் காணலாம். வாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வடப்பகுதியில் அமைந்துள்ள இம்மாவட்டம், பண்டைக்காலம் தொட்டு, மலைகள் மற்றும் ஆறுகளின் அழகு, சீனாவில் முதல் இடம் பெறுகின்றது என்ற புகழ் பெற்றுள்ள குவெய்லின் நகரிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இம்மாவட்டத்தின் ஒலிபரப்பு பணியகத்தின் துணைத் தலைவர் பான்பெய்அன் எடுத்துக்கூறியதாவது, லுங்சன் தேசிய இனத் தன்னாட்சி மாவட்டத்தில் மியௌ இனம், யௌ இனம், துங் இனம், சுவாங் இனம், ஹாங் இனம் ஆகியவை இருக்கின்றன. அதன் மொத்த மக்கள் தொகை, ஒரு லட்சத்து 60 ஆயிரமாகும். ஹுவாழ் என்னும் ஒருவகை கல் ஏற்றுமதியும், சுற்றுலாத்துறை வளர்ச்சியும் இம்மாவட்டத்தின் பொருளாதார வருமானத்தின் ஊற்றுமூலமாகும். சுற்றுலாத்துறையானது, இம்மாவட்டத்தின் முக்கிய தொழிலாகும். இங்குள்ள இதர தொடர்புடைய தொழில்களின் வளர்ச்சிக்கு, சுற்றுலாத்துறை, உந்து சக்தியாகத் திகழ்கிந்றது. கடந்த ஆண்டு, சுற்றுப்பயணத்தின் மூலம் 4 கோடி யுவானை, இம்மாவட்டம் பெற்றிருக்கினறது. 4 லட்சத்துக்கும் அதிகமான உள்நாட்டு வெளிநாட்டுப் பயணிகள் இங்கு வருகை தந்தனர் என்றார் அவர். துணைத் தலைவர் பான்பெய்அனுடன், லுங்ச்சி அடுக்கு முறை சாகுபடி வயல் காட்சித் தலத்தைச் சென்றடைந்தோம். வண்டியிலிருந்து தரையிறங்கியதும், ஒரே பசுமை, எங்கள் கண்களுக்குத் தென்படுகின்றது. சீனாவில் அற்புதம் என்றழைக்கப்படும் லுங்ச்சி அடுக்கு முறை சாகுபடி வயல் இதுவாகும். கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 800 மீட்டர் வரையான உயரமுடைய மலைகளில் 66 சதுர மீட்டர் பரப்பளவுடைய லுங்ச்சி அடுக்கு முறை சாகுபடி வயல், சீராக மலை அடிவாரத்திலிருந்து தொடங்கி, மலை சிகரத்துக்கு வளைந்து செல்கின்றது. மலைச்சிரிவில் கட்டியமைக்கப்பட்ட லுங்ச்சி அடுக்கு முறை சாகுபடி வயல் பார்ப்பதற்குக் கம்பீரமாக உள்ளது.
1 2
|