• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-22 11:32:59    
லுங்ச்சி அடுக்கு முறை சாகுபடி வயல்

cri

சீன வரலாற்றில் யுவான் வமிசக் காலத்தின் இறுதியில் இவ்வயல் கட்டப்படத் துவங்கி, சிங் வமிசகாலத்தின் துவக்கக் காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. எனவே, இவ்வயலுக்கு 660 ஆண்டு வரலாறு உண்டு. லுங்ச்சி மக்கள், தலைமுறை தலைமுறையாக இம்மலைப் பிரதேசத்தில் வாழ்ந்து, இந்த எழிலான லுங்ச்சி அடுக்கு முறை சாகுபடி வயலில் உழைத்துவருகின்றனர். 50 வயதான சுவாங் இன மகளிர் வெய்குவெய்யு எங்களை வரவேற்றார். இங்குள்ள லுங்ச்சி அடுக்கு முறை சாகுபடி வயல் பற்றி அறிமுகப்படுத்தினார். இவ்வயல்களில், முக்கியமாக நெல் பயிரிடப்படுவதைக் கண்டோம். மர அமைவுடைய மூன்று மாடி வீட்டுக்கு அவர் எங்களை அழைத்துச் சென்றார். தனிச்சிறப்பியல்புடைய இத்தகைய மர அமைவுடைய மாடிக் கட்டிடம், சுவான் இன மக்களின் பாரம்பிரிய வீடு ஆகும். அவளுடைய இரண்டு மாடி கட்டிடங்களைத் தங்குமிடமாகக் கொண்டு, பயணிகளை வரவேற்பதற்கானவை. இங்குள்ள சுற்றுலாத்துறையின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்ட போது அவர் கூறியதாவது, 20 ஆண்டுகளுக்கு முன் குவெய்லின் சுற்றுலா பணியகத்தின் பயண வழிகாட்டி, பயணிகளை இங்கு கொண்டு வரச்செய்தார். படிக்கட்டு வயல், சுற்றுப்பயணத்துறையை வளர்ச்சியுறச் செய்வதற்குப் பயன்படலாம் என்று கண்டுபிடித்து, இவ்வயலை நிழற்படமாகப் பிடித்து உள்நாட்டு வெளிநாட்டுப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது முதல், லுங்ச்சி அடுக்கு முறை சாகுபடி வயல், உள்நாட்டு வெலிநாட்டுப் பயணிகளின் மனதில் நன்கு தெரிந்து, பார்வையிட ஆர்வமிகுந்து ஒரு காட்சித் தலமாகியுள்ளது.

வெய்குவெயு இருக்கும் கிராமத்தில் உள்ள மொத்தம் 24 குடும்பங்களும் சுற்றுலாத் துறையில் ஈடுபடுகின்றன. அவரது குடும்பத்திலுள்ள எட்டு பேரும் சுற்றுலாத் துறையில் ஈடுபடுகின்றனர். அவரது பிள்ளைகள், அயல் மொழியில் அந்நிய பயணிகளுடன் உரையாடுகின்றனர். அவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம், 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் யுவான் ஆகும். சுற்றுலாத்துறை தவிர, கிராமவாசிகள் வேளாண் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். தாம் உற்பத்தி செய்த உள்ளூர் இனிப்பு பொருட்களைக் கொண்டு, பயணிகளுக்கு வழங்குகின்றனர். சீனாவின் சுற்றுலாத்துறையை சார்ஸ்நோய் பெரிதும் பாதித்துள்ளது. லுங்சன் தேசிய இனத் தன்னாட்சி மாவட்டமும் விதிவிலக்கு அல்ல. முற்றுலாத்துறையை மறுமலர்ச்சியுறச் செய்ய, இம்மாவட்டம், ஒரு பெரிய நடவடிக்கை மேற்கொண்டது. பென்பெய்அன் கூறியதாவது, மாவட்டத்தின் அழைப்பின் பேரில், மைய தொலைக்காட்சி நிலையம் உள்ளிட்ட நாடு தழுவிய செய்தி ஊடகங்கள் இங்கு வருகை தந்துள்ளன. 160க்கும் அதிகமான செய்திமுகவர்கள், சுற்றுலா மீட்புக்கான விழாவை ஏற்பாடு செய்தநர். இதன் மூலம் சுற்றுலாத்துறை மறுமலர்ச்சியுற்று, நாள்தோறும் உள்நாட்டு வெளிநாட்டுப் பயணிகள் லுங்ச்சி அடுக்கு முறை சாகுபடி வயலைப் பார்வையிட இங்கு வருகை தருகின்றனர் என்றார் அவர்.


1  2