• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-08 13:23:48    
சீனாவின் மெய்லி உறைபனி மலை

cri

திசின் திபெத் தன்னாட்சி சோ, தென்மேற்கு சீனாவின் யுன்நான் மாநிலத்தின் மிக உயரகமான நில வமைப்பில் உள்ளது. அங்கு பயணிகள் நூற்றுக்கணக்கான லீ தூரம் நீடித்திருக்கும் பிரமாண்டமான உறைபனி மலையைக் காணலாம். இதில் மிக செங்குத்தான வியதகு சிகரங்கள் 13 உள்ளன. இவை தான் மெய்லி உறைபனி மலையாகும். உள்ளூர் திபெத் மக்கள் அதை தெய்வீக மலை என கருதுகின்றனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மத நம்பிக்கையாளர்கள் அங்கு உறஜ் பயணம் மேற்கொள்கின்றனர். உள்ளூர் மக்கள் கூறியவாறு கால நிலை எதிர்பாராதவாறு மாறிவருவதால், மெய்லி உறைபனி மலையில் 4 பருவ காலங்களுக்கு ஏற்ப பல்வகை அழகான காட்சிகளைக் கண்டுகளிக்கலாம். இம்மலை கடல் மட்டத்திலுரந்து மிக உயரத்தில் உருப்பதநால், அதன் முக்கிய சிகரமான காவாகபோ சிகரம், அடிக்கடி மேகங்களாலும் மூடு பனியாலும் சூழப்பட்டிருக்கின்றது. வானம் தெளிவாக இருக்கும் பலவ காலத்திலும் கூடு, மூடு பனி மூலம் இம்மலைக் காட்சியை எளிதில் காண முடியாது. எனவே, தெய்வீக மலை மேலும் மாயமாக உள்ளது.

இது வரை, மெய்லி உறைபனி மலையானது, மக்கள் ஏற முடியாத கன்னிச் சிகரங்களில் ஒன்றாகும். 1987ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை, ஜப்பான், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மலை ஏற்றவீரர்கள். பன்முறை இம்மலையில் ஏற முயன்றனர். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. 1991ஆம் ஆண்டு 17 சீன-ஜப்பானியர் கூட்டாக இம்மலையில் ஏறிய போது, அனைவரும் அதற்கு பலியாயினர். இது, உலக மலை ஏறும் வரலாற்றில் மிகவும் துயரமான நிகழ்ச்சியாகும். கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் பயணம் மேற்கொள்ளும் இன்னல்களைக் குறைக்கும் வகையில், பயணிகள் மலை ஏறும் போது குதிரை சவாரி செய்ய வேண்டும்.

1  2