• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-08 13:23:48    
சீனாவின் மெய்லி உறைபனி மலை

cri

மலை அடிவாரத்திலுள்ள மிங் யொன் கிராமம், ஒரு குதிரை குழுவை உருவாக்கியுள்ளது. மலை பாதைக்கு அறிமுகமான திபெத் மக்கள், பயணிகளைக் குதிரையில் கூட்டிச்செல்கிந்றனர். இக்குழுவில் 40-50 குதிரைகள் உள்ளன. குதிரையில் பயணிகளை மலைக்கு கூட்டிச்செல்வது, கிராமவாசிகளுக்கு வருமானத்தை அதிகரித்துள்ளது மட்டுமின்றி, அவர்களுக்கு வெளி உலக தகவல்கள் பலவற்றையும் கொண்டு வந்துள்ளது என்று ஆபொன் எனும் இளைஞர், எமது செய்தியாளரிடம் கூறினார். ஆபொன்னியுடன் பேசிக்கொண்டே, 5-6 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து செந்றுள்ளோம். மலை பாதை ஊர்ந்து வளைந்து செல்கின்றது. சுற்றுப்புறங்களிலும் அடர்ந்த புராதன சைப்ரஸ் மரங்கள் காணப்படுகின்றன. பிரமாண்டமான பனிக்கட்டி ஆறு, பிரமிடு போல மூடு பனிக்கிடையில் நிமிர்ந்து நிற்கின்றது. இன்னும் சில கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்ற பின் இறுதியில் ஓய்விடம் ஒன்றை அடைந்தோம். தலையை நிமிர்ந்து மேலே பார்த்தவுடனே, கம்பீரமான காவாகபோ சிகரம் எங்கள் கண்ணில் பட்டது.

கோடிக்கணக்காந ஆண்டுகள் கடந்து உருவாகிய பனிக்கட்டியாற்றைப் பார்த்த போது, நாங்கள் அனைவரும் மௌனமாகிவிட்டோம். எங்களுடன் வந்த லீ யின் வாய் கூறியதாவது, நாங்கள் இப்போது இருக்கும் இடத்தின் திபெத் பெயர், நி நோ அதாவது, தேவர் அரண்மனையில் என்பது பொருளாகும். இன்று இரவு நாங்கள் அதைக் காண முடிந்தமை, ஒரு மங்கல அறிகுறியாகும். அவருடைய உரையைக் கேட்டவுடனே, நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் மூழ்கினோம். தொலைநோக்கி மூலம், பனிக்கட்டி ஆற்றைக் கண்டு களித்தோம். பனிக்கட்டியால் வாள் உருவெடுத்த கம்பம், தளிர் மூங்கில் முளை ஆகியவை இருந்தன. இடைஇடையே இடி முழக்கம் போன்ற ஒலி செவி சாய்க்க முடிந்தது. இது பனிக்க்ட்டி சரிந்துவிழும் ஒலி என்று தெரிய வந்தது. சில நிமிடங்களுக்குக் பின், அடர்ந்த மூடு பனியில் இந்த மலை சிகரம் கண்ணிலிருந்து மறைந்துவிட்டது.


1  2