• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-15 22:04:47    
சமையல் கலை நாட்டில் சுற்றுலா

cri

சீனா, 5000 ஆண்டுகால வரலாறுடைய புராதன நாகரிக நாடாகும். அயரா உழைப்பும் விவேகமும் படைத்த சீன நாடு, ஏராளமான பல்வகை சீனப் பண்பாட்டை உருவாக்கியுள்ளது. சமையல் நுட்பப் பண்பாடு, சீனப் பண்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். உலகில் அது பெரும் புகழ் பெற்றுள்ளது. தனிச்சிறப்பியல்புடைய சீன உணவுகளைச் சுவை பார்ப்பதில், சீனப் பயணத்தில் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இவ்வாண்டு, சீன தேசிய சுற்றுலா நிர்வாகம், 2003ஆம் ஆண்டு சமையல் கலை நாடான சீனாவில் பயணம் என்ற தலைப்பிலான சுற்றுப்பாயணத்தை நடத்துகின்றது. உள்நாட்டு மற்றும் வெஎளிநாட்டுப் பயணிகள், சீனாவின் சமையல் நுட்பப் பண்பாட்டை மேலும் அதிகமாகப் புரிந்துகொள்ளச் செய்வதே, அதன் நோக்குமாகும். இத்தலைப்பு பற்றிக் குறிப்பிட்ட போது, சீன தேசிய சுற்றுலா நிர்வாகத்தின் அதிகாரி லியூ க்சி கூறியதாவது, சமையல் கலை நாட்டில் சுற்றுப்பயணம் என்ற தலைப்பை ஏன் முன்வைக்க வேண்டும் ? அனைவரும் அறிந்தவாறு, சீனா, வாழையடி வாழையான வரலாறும் பண்பாட்டுப் பாரம்பரியமும் உடைய ஒரு நாடு.

அதிகமான வெளிநாட்டுப் பயணிகள், சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதன் நோக்கும்.சீனாவின் நீண்டகால வரலாற்றையும் பண்பாட்டையும் கண்டுகளித்து, சீனாவின் எழிலான மலைகள் ஆறுகளைப் பார்ப்பதாகும். ஆனால், சீனாவின் மாபெரும், தலைசிறந்த, நீண்டகால வரலாறுடைய சமையல் நுட்பப் பம்பாடு, குறிப்பிடத் தக்கது. வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலா செய்யும் அதேவேளையில், சீனாவின் சுவையான உணவுப்பொருட்களை உட்கொண்டு, இதன் மூலம், சீனாவின் சமையல் நுட்பப் பண்பாட்டின் மீதான புரிந்துணர்வை ஆழமாக்கச் செய்வது எங்களின் நோக்கமாகும் என்றார் அவர். சீனாவின் உணவுப்பொருள் பண்பாடு நீண்டகால வரலாறுடையது. 3000 ஆண்டுகளுக்கு முன் செம்மையான அடுப்புகளையும் சமையல் பாத்திரங்களையும் சீன மக்கள் பயன்படுத்தினர் என்பதை, தோண்டி எடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள் காட்டுகிந்றன. அப்பொழுது, சமையல் நுட்பத்தை சீனர் கற்றுத்தேர்ந்துள்ளனர் என்பது தெரிகின்றது.

1  2