• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-15 22:04:47    
சமையல் கலை நாட்டில் சுற்றுலா

cri

பல்லாயிரம் ஆண்டுகால வளர்ச்சி மூலம், சீனாவில் முழுமையான, தனிச்ச்றப்பியல்புடைய சமையல் நுட்ப முறைமை ஒன்று உருவாகியுள்ளது. உள்ளூர் கறி, அரண்மனை கறி, சிறுபான்மை தேசிய இன கறி, மத நம்பிக்கையுடையோர் உட்கொள்ளும் சிங்சென் கறி, காய்கறி ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. சீனாவில், சீன உணவுகளை சுவை பார்க்கும் போது, பயணிகள் ருசியான சீன கறிகளை உட்கொண்டு மகிழலாம். அனஅறி, சீன உணவுப் பொருள் பம்பாட்டையும் புரிந்து கொள்ளலாம் என்று லியூ க்சி குறிப்பிட்டார். அவர் கூறியதாவது, எடுத்துக்காட்டாக, சி அன் நகரில், புகழ்பெற்ற சியொ சி விருந்து உணஅடு. சியொ சி என்றால், சீன மக்கள், குறிப்பாக, வட சீன மக்கள் விரும்பி உட்கொள்ளும் ஒரு வகை உணவாகும். சிறப்பாக, புத்தாண்டு விழா நாட்களில், அனைவரும் சியொ சியை, அதாவது, இறைச்சிக் கொழுக்கட்டை செய்து உட்கொள்வார்கள். சி அன் நகரம், இவ்விருந்தை பயணிகளுக்கு அளித்த பிந், இது மிகவும் வரவேற்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டுப் பயணிகள், வேறு வகையான சியொ சிகளைச் சுவை பார்க்க முடிந்ததை வியந்து பாராட்டியுள்ளனர் என்றார் அவர்.

சீனாவின் பல்வேறு இடங்கள் தலைப்புக்கு ஏற்ப தொடர்புடைய நடவடிக்கைகள் பலவற்றை நடத்தியுள்ளன. சீனாவின் பாரம்பரிய விழாவான வசந்த விழா நாட்களில், தெந் சீனாவின் குவாங்துங் மாநிலம், கிழக்கு சீனாவின் சாங்காய் மாநகரம் மற்றும் சீனாவின் பல்வேறு இடங்களில் சுவையான விருந்து நடத்தப்படும். இவ்வாண்டு, வெளிநாட்டுப் பயணிகள் சீனாவில் சுற்றுலா மேற்கொள்ளும் போது, எங்கு இருந்தாலும், உள்ளூர் தனிச்சிறப்பியல்பு உடைய சுவையான உணவுப்பொருட்களை உட்கொண்டு மகிழலாம் என்று சீன தேசிய சுற்றுலா நிர்வாகத்தின் அதிகாரி லியூ க்சி கூறினார். சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு அவர் வெளிநாட்டுப் பயணிகளுக்கு அழைப்பு விடுத்தார். அவர் கூறியதாவது, சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். தற்போது, உலகில் சீனா, முதலீடு செய்வதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாகும். அனஅறி, உலகில் மிகவும் பாதுகாப்பான சுற்றுலாத்தலமுமாகும். பல்லாயிரம் ஆண்டு கால நாகரிக வரலாறு, தொல்பொருள் சிதிலங்கள் மற்றும் கம்பீரமான எழிலான மலைகள் மற்றும் ஆறுகளைக் கண்டுகளிக்கலாம். விருந்தோம்பல் மிக்க சீன மக்களுடன் கலந்துரையாடலாம். சீனாவின் அறு சுவை உணவுகளை ருசி பார்க்கலாம் என்றார் அவர்.


1  2