
அழகான ஹைட்ரஜன் பலூன்
 உலகின் முதல் ஹைட்ரஜன் பலூம் ஆயிரத்து எழுநூற்று என்பத்தி மூனறாம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியன்று பாரிஸ் நகரில் பறந்தது. இப்பலூனைத் தயாரித்தவர் சார்லஸ் சூரியம் மறைந்த பிறகு இப்பலூனில் புறப்பட்ட இவர் தொன்னூறு மீட்டர் உயரத்தில் இரண்டாவது முறையாக சூரியன் மறையும் காட்சியைப் பார்த்தார்.
முப்பதிரண்டு மைல் தூரம் கைகளால் நடந்த மாணவர்கள்
எய்ட்ஸ் நோய் தாக்கிய சிறுவர்களுக்கு உதவுவதற்காக லியோசாவ், சீன்டபி ஆகிய 2 மாணவர்கள் கைகளால் முப்பதிரண்டு மைல் தூரம் நடந்து கின்ஷ் சாதனை படைத்தனர். இந்த சாதனை மூலம் ஐந்து லட்சத்து ஐந்பத்தைந்து ஆயிரம் ரூபாய் திரட்டப்பட்டது.
நாற்பத்தைந்து மணி நேரம் இப்படி நடந்து சாதனை படைத்த இந்த இரண்டு மாணவர்களும் மறுநாள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். முட்டியில் வலி ஏற்பட்டாதலும், உடலில் நீர்ச்சத்து இல்லாம்ல் போனதாலும் அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
வாழ்வு கொடுத்த ஓவியம்
அமெரிக்காவில் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் ஆல்பர்ட்ரேவினா. வயது எழுபத்தேழு. நிலச்சரிவில் அவர் வீடு இடிந்து விழுந்தது. வீடு இடியத் தொடங்கியதும் அவர் தன் பொருட்களையும், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கிய ஓவியம் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வெளியேறினார். இன்சூரன்ஸ் கம்பெனிகள் நஷ்டஊடு எதுவும் தர மறுத்துவிட்டன.
ஜோசப் கிஷிட்ஸ் 1923-ம் ஆண்டு தீட்டிய மாலை நேரத்து நிழல் என்ற அந்த ஓவியம் 2.5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்சூரன்சு கம்பெனிகள் கைவிட்ட போதிலும் ஓவியம் அவரைக் காப்பாற்றியது.
1 2
|