தொன்னுற்றெட்டு வயதானவரின் வழக்கில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த விசாரணை
இத்தாலி நாட்டில் சொத்துப் பிரச்சினைக்காக தன் உறவினர்கள் மீது 98 வயது அமலியா கியூசியோலெட்டி என்ற முதியவர் வழக்குத் தொடர்ந்தார். தொன்னுற்றேழாம் ஆண்டில் வழக்கைத் தொடர்ந்து போது அவருக்கு வயது தொன்னூறு.
அகெரட்டா நகரில் உள்ள கோர்ட்டில் முதல் விசாரணை ஈராயிரத்து ஓராம் ஆண்டு வந்தது. அடுத்த விசாரணையை ஈராயிரத்து பத்தாம் ஆண்டு மார்ச் மாதம் 25ந் தேதிக்கு நீதிபதி ஒத்து வைத்தார்.
தீப்ப்பைக்கேட்பதற்கு அமலியா பெரும்பாலும் இருக்கமாட்டார் என்று அவரது வக்கீல்கள் கூறினர்.
இத்தாலியில் ஒரு சிவில் வழக்கில் தீப்ப்புக்கூற சராசரியாக மூவாயிரத்து நாற்பத்தொன்று நாட்கள் ஆகின்றன.
இரு நூற்று மூன்று கிலோ எடையும் ஏழு அடி ஆறு அங்குல உயரமும் உள்ளவரை காப்பாற்றப்பட்ட பாடு
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் அலய்ன் டெலாயூ னோய்ஸ். இவர் உடல் பருமன் மிகுந்தவர். இரு நூற்று கிலோ எடையும், ஏழு அடி ஆறு அங்குலம் உயரமும் உள்ளவர். இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அவரை ஹெலிகாப்டரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவரை ஹெலிகாடபுடருக்குள் ஏற்ற முடியவில்லை. இதனால் ஹெல்காப்டருக்குப் பதிலாக ஆம்பலன்ஸ் கொண்டு வரப்பட்டது. அதிலும் அவரை ஏற்ற முடியவில்லை. எப்படியோ கூஷ்டப்பட்டு அவரை ஏற்று ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுக்கும் படி டாக்டர்கள் கூறினர். ஆனால் ஸ்கேன் மெஷினை விட அவரது உடம்பு பெரியதாக இருந்ததால் ஸ்கேன் யெய்ய முடியவில்லை. இதனால் மாற்றி ஏற்பாடு செய்யப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டியறிய ஆப்ரேஷன் டேபின் அவரைவிட சிறியதாக இருக்கின்றது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் டாக்டர்கள் விழிபிதுங்கிப்போய்விட்டனர்.
1 2
|