கலை.....துணை தலைவர் சான் சியௌ யூ சொன்னது சரியானது. சீனாவில் ஒருங்கிணைந்த, திறந்த, போட்டியிடக் கூடிய மற்றும் ஒழுங்கான கார் சந்தை முறையை உருவாக்குவது இந்த கொள்கையின் நோக்கமாகும்.
ராஜா.....ஆமாம். 2010ம் ஆண்டில் சீனாவை சர்வதேச வளர்ச்சியுடன் இணைக்கும் நவீன கார் வர்த்தக அமைப்பு முறை நிறுவப்படும் என்று இந்த கொள்கையில் தெளிவாக கூறப்படுகின்றது.
கலை...... சீனக் கார் வர்த்தகத் தொழிலில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதோடு, அலுவல் நடத்துவதிலும் அவை உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு இணையாக நடத்தப்படும் என்று இந்த கொள்கையில் கூறப்பட்டு வலுவான பொருளாதார ஆற்றல் கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கின்றது.
ராஜா...இந்த கொள்கையை ஆராய்ந்த போது கார் சந்தையை ஒழுங்குபடுத்துவது, நுகர்வோரின் உரிமையையும் நலனையும் பேணிக்காப்பது இந்த கொள்கையின் முக்கிய அம்சங்கள் எனத் தெரிகின்றது. அப்படிதானே.
1 2
|