கலை.... சரிதான். 2006ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் முதலாம் நாள் வரை கார் பெயர்களின் அடிப்படையில் விற்பனை செய்யப்படும். கார் வாங்குவோருக்கு சேவை புரியப்படும். நுகர்வோரின் தேவையை தாமதமின்றி நிறைவேற்றுவதற்கு உத்தரவாதம் செய்யும் வகையில் கார் அடையாள அட்டை, உதிரி பாகங்கள் விநியோகம், 150 கிலோமீட்டர் தொலைவுக்குள் சேவை புரியும் தொடரமைப்பு உற்பத்தி நிறுத்தப்பட்ட கார் வகைகளை பழுதுபார்க்க கார் விற்பனையாளர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு உரிய காலத்துக்குள் உதிரி பாகங்களை வரவழைத்துத் தர வேண்டும் என்று இந்த கொள்கை தெள்ளத்தெளிவாக கூறுகின்றது.
ராஜா......இவையனைத்தும் தவிர, பழைய கார் விற்பனை
மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்துவது இந்தக் கொள்கையில் கவனிக்கத்தக்க இன்னொரு அம்சமாகும். சீன சமூக அறிவியல் கழகத்தின் பொருளாதார துறையின் பேராசிரியர் ஹென் மங்கின் கருத்தை கேளுங்கள்
இந்த நடவடிக்கை பல்வேறு துறையினரின் அக்கறையை ஈர்த்துள்ளது. வெகுவிரைவில் பழைய கார் விற்பனைச் சந்தையில் பரிமாற்ற அளவு புதிய கார் பரிமாற்ற அளவையைத் தாண்டும். இதன் விளைவாக, வாடகைக்கு கார் விடுவது, ஏலமிட்டு விற்கப்படுவது, பரிமாற்றம், அழகுபடுத்துவது போன்ற சேவைத் துறைகள் வளரும். கார் தயாரிப்புத் தொழிலும் வளரும்.
கலை..... திறமை மிக்க கார் விற்பனையாளர்கள் பழைய கார் விற்பனை செய்வதற்கு இந்த கார் வர்த்தக கொள்கை ஆதரவளிக்கின்றது. அத்துடன் பழைய கார் விற்பனைக்குத் தேவைப்படும் அலுவலை எளிதாக்கும். இத்தகைய காரை மதிப்பிடுவதை ஒழுங்குபடுத்தும்.
ராஜா......இதுவரை சீனாவில் பழைய கார் விற்பனை அளவு கார் விற்பனை அளவில் 30 விழுக்காடு மட்டும் வகிக்கின்றது. இது வளர்ந்த நாடுகளின் நிலைமையை விட குறைவது.
கலை.....ஆகவே பழைய கார் விற்பனை விதிகளைத் தளர்த்துவது சீனாவின் பழைய கார் சந்தையின் வளர்ச்சிக்கு துணை புரியும். இது மட்டுமல்ல கார் சந்தையை ஒழுங்குபடுத்தவும் முழுமையாக்கவும் உதவும்.
ராஜா.....நேயர்களே கார் தயாரிப்பு நிலைமையில் சீனா எந்த கொள்கை மேற்கொள்வது பற்றி கேட்டீர்கள். இத்துடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. 1 2
|