• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-08 18:58:38    
மக்கள் விரும்பிய திபெத் புத்த மத தலைவர்

cri

பத்து ஆண்டுகளுக்கு மும்பு திபெத் மத விதிகள் மற்றும் வரலாற்று விதிகளின் படி 5 வயதான திபெத் இன சிறுவன் அதிகாரப்பூர்வமாக 11வது பஞ்ச்சானாக நியமிக்கப்பட்டார். பதவி ஏற்று 10 ஆண்டுகள் நிறைவதை முன்னிட்டு இன்று அவர் படித்து வாழ்கின்ற சாஸரம்பு கோயிலில் பிரமாண்டமான கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த புத்த மதத் துறவிகள் கோயிலுக்குள்ளேயும் வெளியேயும் காணப்படுகின்றனர். அவர்கள் ஹாடா மற்றும் மலர்களை பிடித்து விழா ஆடைகளை அணிந்து 11வது பஞ்ச்சன் பதவி வகிக்கின்ற 10வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றனர். 15 நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் கொண்டாட்ட செய்தியை கேட்டறிந்த பாச்சாசி தாம் வசிக்கும் சான்து வட்டாரத்தை சேர்ந்த சக கிராமவாசிகளுடன் இணைந்து ஞெக்கச்செ வந்தடைந்துள்ளார். அவர் கூறியதாவது நாங்கள் பஞ்ச்சனை வணங்கினோம். அவரிடமிருந்து ஆசி பெற்றோம். நாங்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டோம், பஞ்ச்சன் வாழும் துத்தர் நமது ஊருக்கு வந்து புத்த நடவடிக்கைக்கு தலைமை தாங்க வேண்டும். எங்கள் மக்கள் அவர் மீது மிகவும் மதிப்பு தொண்டுள்ளனர்.

அவர் வருகை தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர் என்றார்.பஞ்ச்சந் என்பவர் திபெத் புத்த மதத்தை தலைவர்களில் ஒருவராவார். அறிஞர் என இதற்குப் பொருள். 18வது நூற்றாண்டின் துவக்கம் முதல் பஞ்ச்சன்கள் மத்திய அரசினால் நியமிக்கப்பட்டனர். பஞ்ச்சன் என்னும் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் வழி முறை உண்டு. சீன மத்திய அரசின் அனுமதி மூலம் சிச்சைனோபு 1995ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 8ம் நாளன்று சாஷ்ரம்பு கோயிலில் அதிகாரப்பூர்வமாக 11வது பஞ்ச்சனாக பதவி ஏற்றார்.சாஸ்ரம்பு கோயில் 15வது நூற்றாண்டின் நடுவில் நிறுவப்பட்டது. 4வது பஞ்ச்சன் முதல் இந்த கோயில் பாச்சென்கள் தங்கிப்படிக்கும் இடமாகியுள்ளது. 11வது பஞ்ச்சன் இதில் பல்வகை திபெத் புத்த மத விஷயங்களைக் கற்றுக் கொண்டார். மிகவும் அனுபவம் கொண்ட சியான் யான் சியா ச்சோ பாச்செனின் புத்த மத ஆசிரியாராக திகழ்கின்றார்.


1  2