• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-12 16:33:19    
சீனாவில் டிஜிட்டல் தொலைக்காட்சி தொழிலின் வளர்ச்சி

cri

2015ஆம் ஆண்டுக்குள், சீனாவில், தொலைக்காட்சி புரட்சி ஏற்பட்டு, டிஜிட்டல் தொலைக்காட்சி பரவி விடும் என்று சீனத் தேசிய வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தலைமை ஆணையம் அண்மையில் பெய்ஜிங்கில் அறிவித்தது. சீனாவில் தற்போது உள்ள சுமார் 40 கோடி தொலைக்காட்சி பெட்டிகளில், மிக பெரும்பாலானவை அகற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக, புதிய டிஜிட்டல் தொலைக்காட்சிகள் பயன்படுத்தப்படும். சீனாவில் வானொலியும் தொலைக்காட்சியும் டிஜிட்டல் மயமாக்கி, ஒரு புதிய மாபெரும் டிஜிட்டல் தொலைக்காட்சித் தொழில் வளர்ச்சியுற்று வருகின்றது.

டிஜிட்டல் தொலைக்காட்சி என்பது, கருப்பு வெள்ளை டிவி, வண்ணத் தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது தலைமுறை தொலைக்காட்சியாகும். தொலைக்காட்சி சமிக்ஞைகள் இலக்கமுறைத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் கடத்தப்படும்.

2003ஆம் ஆண்டு முதல், சீனாவின் Qingdao, Hangzhou, Foshan உள்ளிட்ட 49 நகர்களில் வசிக்கும் குடிமக்கள், டிஜிட்டல் தொலைக்காட்சியைக் கண்டுவருகின்றனர். டிஜிட்டல் தொலைக்காட்சி முறையினால், சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியில், DVD போன்ற தெளிவான படத்தைக் கண்டு ரசிக்க முடியும். திரையரங்கின் ஒலித்திறனைக் கேட்டு மகிழ முடியும். இதற்கிடையில், புதிதாக துவங்கும் பலதரப்பட்ட, தனிச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகளை பயன்படுத்துவோர் கண்டு ரசிக்கும் வேளையில், அரசு விவகாரங்கள், வணிக விவகாரங்கள், உடனடி போக்குவரத்து தகவல்கள் உள்ளிட்ட அதிகப்படியான ஆலோசனை தகவல்களையும் சேவைகளையும் உடனுக்குடன் பெற முடியும்.

1  2  3