• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-12 16:33:19    
சீனாவில் டிஜிட்டல் தொலைக்காட்சி தொழிலின் வளர்ச்சி

cri

சீன டிஜிட்டல் தொலைக்காட்சி தொழிலின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் பொருட்டு, டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு மாறும் கால அட்டவணையை சீன அரசு வகுத்துள்ளது. சீனத் தேசிய வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தலைமை ஆணையத்தைச் சேர்ந்த அறிவியல் தொழில் நுட்பப் பிரிவின் துணை தலைவர் Wang Lian கூறியதாவது:

"கேபிள் தொலைக்காட்சியிலிருந்து டிஜிட்டல் தொலைக்காட்சியை நோக்கி மாறும் போக்கில், கிழக்கு பகுதி, மத்திய பகுதி, மேற்கு பகுதி ஆகிய மூன்று பகுதிகளில், நான்கு கட்டங்களாக, டிஜிட்டல் தொலைக்காட்சியின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் திட்டத்தை வகுத்து, 2015ஆம் ஆண்டுக்குள், இந்த மாற்றத்தை முழுமையாக்க பாடுபடுகின்றோம்." என்றார் அவர்.

தற்போது, சீன சமூகத்தில் தொலைக்காட்சி பெட்டிகளின் எண்ணிக்கை, 40 கோடியைத் தாண்டியுள்ளது. தொலைக்காட்சியின் டிஜிட்டல் மயமாக்கம், தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரிய வாய்ப்பாகும். எதிர்கால டிஜிட்டல் தொலைக்காட்சி சந்தையில் போட்டியிடும் பொருட்டு, டிஜிட்டல் தொலைக்காட்சி பெட்டியின் வளர்ச்சியில் சீனாவின் தொலைக்காட்சி பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் பல ஈடுபட்டுள்ளன. TCL மின்சாரக் கருவி விற்பனை நிறுவனத்தின் துணை தலைமை மேலாளர் Luo Qiu Lin பேசுகையில், டிஜிட்டல் தொலைக்காட்சி தொழிலின் வளர்ச்சியில் தமது நிறுவனம் மிகுந்த கவனம் செலுத்தி, விபரமான முதலீடு மற்றும் வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்தை தீட்டியுள்ளது என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"நுகர்வோரின் நலனை நிறைவு செய்வதை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் தொலைக்காட்சி பெட்டியின் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் TCL ஈடுபடும். டிஜிட்டல் ஒளிபரப்பு முறையையும், பெறும் முறையையும் ஒருங்கிணைத்து, டிஜிட்டல் தொலைக்காட்சி மேடையை அமைத்து, பரஸ்பரம் பயனளிக்கும் புதிய மாதிரி உருவாக்கப்படும்." என்றார் அவர்.

1  2  3